ஒச்சாயி திரைப்படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
உசிலம்பட்டியைச் சேர்ந்த ஓ.ஆசைத்தம்பி என்பவர் இயக்கியுள்ள படம் ஒச்சாயி. தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளித்து வருகிறது தமிழக அரசு.
ஆனால் ஒச்சாயி என்ற பெயர் தமிழ்ப் பெயரா என்பதில் சந்தேகம் உள்ளதாக கூறி அப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுத்து விட்டது அரசு. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தினரின் குல தெய்வம்தான் ஒச்சாயி அம்மன். எனவே இது சுத்தமான தமிழ்ப் பெயர்தான். இப்படத்துக்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. சிபிஐ தலைவர் தா.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இதுகுறித்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தற்போது ஒச்சாயி படத்துக்கும் கேளிக்கை வரி விலக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் திரவிய பாண்டியன், முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.
முதல்வருடன் சேரன் சந்திப்பு
இதேபோல சினிமா இயக்குநர் சேரன், முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்று கூறப்பட்டுள்ளது
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே