ராஜ் தாக்கரேவுக்கும் எனக்கும் இடையில்தான் சண்டை. ராஜ் தாக்கரே என்னைத் திட்டட்டும், ஆனால் எனது தந்தையை விமர்சித்தால் பொறுக்க முடியாது என்று ராஜ் தாக்கரேவை எச்சரித்துள்ளார் சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்கரே.
சமீபத்தில் பால் தாக்கரேவை முதல் முறையா கடுமையாக விமர்சித்திருந்தார் ராஜ் தாக்கரே. மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியை ஆரம்பித்தது முதல் அவர் பால் தாக்கரேவை ஒரு முறை கூட விமர்சித்ததில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
எட்டரை மணிக்கு மேல் என்ன நடக்கிறது என்று அவர் பால் தாக்கரேவை குடிகாரர் என்பது போல சிக்னல் காட்டிப் பேசியதால் பரபரப்பு கூடியது.
இந்த நிலையில் ராஜ் தாக்கரேவுக்கு உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
என்னை அவர் விமர்சித்தால் நான் பொறுத்துக் கொள்வேன். பிரச்சினை உனக்கும், எனக்கும்தான். ஆனால் எனது தந்தையை நீ விமர்சித்தால் நிச்சயம் உன்னை நான் சும்மா விட மாட்டேன் என்று எச்சரித்துள்ளார் உத்தவ்.
தாக்கரேக்களுக்கிடையே மூண்டுள்ள இந்த மோதலால் அடுத்து எந்த மாதிரியான மோதல் வெடிக்குமோ என்று மும்பை மக்கள் மண்டை காய்ந்து போயுள்ளனர்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே