ரஜினியை இன்னும் அதே இளமையோடு தான் ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்கள் என்பதை எந்திரன் மீண்டும் ஒருமுறை நிருபித்திருக்கிறது. இந்த நிலையில் ரஜினியோடு அடுத்து டூயட் பாடப்போகும் ஹீரோயின் யார் என்ற பரபரப்பு சினிமா வட்டாரத்தில் துவங்கிவிட்டது.
ரஜினியின் ‘ஹரா’ (சுல்தான் தி வாரியர்) படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிப்பார் என செய்திகள் கசிகின்றன. இந்தியில் வெளியான சந்திரமுகி ரீமேக்கில் சந்திரமுகியாக நடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்திரனின் இந்தி பதிப்பான ரோபோ படத்தின் சிறப்புக் காட்சி மும்பையில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட பாலிவுட் இளம் நடிகைகள் ரஜினியுடன் நடிக்க தன் விருப்பத்தை தெரிவித்துக்கொண்டனர். சோனக்ஷி சின்ஹா ‘ரஜினியுடன் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தால் நான் சந்தோஷப்படுவேன்’ என்று சொன்ன போது அருகில் இருந்த பிரியங்கா சோப்ரா ‘ரஜினியோடு சேர்ந்து நடித்தால் அதை விட சந்தோஷம் என் வாழ்வில் எதுவும் இல்லை. என் முதல் படம் தமிழில் தான் அமைந்தது. ரஜினி இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை’ என்று சொல்லி துள்ளி குதித்தார். ஆனால் எல்லோரும் வாயில் கை வைக்கும்படி அந்த வாய்ப்பு வித்யா பாலனுக்கு வாய்த்திருக்கிறது.
இதுகுறித்து வித்யா பாலன் பேசுகையில் ‘ரஜினியோடு நடிப்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் அந்த வாய்ப்பு வந்தால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். இந்த செய்தியை கேட்டதும் என்னைவிட என் பெற்றோருக்கு தான் அதிக மகிழ்ச்சி. ரஜினியோடு நடிக்க நான் கொடுத்துவைத்திருக்க வேண்டும்’ என்று பரவசத்தோடு தன் உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்.
‘மன்மதன் அம்பு’ ஷூட்டிங் முடிந்திருப்பதால். ‘ஹரா’ பணிகளில் இறங்கிவிட்டார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். அனிமேஷன் ரஜினிக்கு விஜயலட்சுமி ஜோடியாக நடித்துக்கொண்டிருக்க, ஒரிஜினல் ரஜினிக்கு ஜோடி யாரு என்பது விரைவில் தெரிய வரும்..!
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே