பாஸ் என்கிற பாஸ்கரனின் இரண்டாவது ஹீரோ எனும் அளவுக்கு காமெடியில் கலக்கியிருந்தவர் சந்தானம். கவுண்டரின் ஸ்டைலில் அவர் அடித்த கமெண்டுகளுக்கு தியேட்டர் கூரையே அதிருமளவுக்கு விசிலும் கைத்தட்டலும் பறக்கிறது. இந்த எந்திரன் சுனாமியிலும் சற்று தாக்குப் பிடித்த படம் பாஸ் என்கிற பாஸ்கரன்தான். இதற்கு சந்தானம் – ஆர்யா கூட்டணியின் காமெடி சரவெடியே காரணம்.
இந்தப் படத்தில் வரும் நண்பேன்டா வசனம் படு பாப்புலர். ஆனால் இந்த ஒற்றைச் சொல்லை, தளபதி படத்தில் மம்முட்டியிடம் ரஜினி சொல்வாரே..’நீ என் நண்பேன்டா’ என்று.. அந்தக் காட்சி பாதிப்பில்தான் வைத்ததாகச் சொல்கிறார் சந்தானம்.
“சின்ன வயசிலேருந்தே நான் தலைவர் ரஜினி ஃபேன். பள்ளிக்கூடத்துக்குப் போகும்போதுகூட ரஜினி சார் ஸ்டைலில்தான் ஹேர் கட் பண்ணிக்குவேன். இதுக்காக எங்க பிடி மாஸ்டர்கிட்ட வாங்கி அடி கொஞ்சமல்ல. ஆனாலும் யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன்.
நான் நடிக்க வந்த பிறகு, எப்படியாவது அவர்கூட நடிக்கனும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். அது குசேலன்ல நிறைவேறினாலும், அவரோட வர்ற மாதிரி சீன் எதுவும் அமையல. இப்போ எந்திரன்ல அந்த வாய்ப்பு கிடைச்சது.
சிலர் சொல்றாங்க, எனக்கும் கருணாசுக்கும் படத்தில ஸ்கோப் இல்லையேன்னு. இந்தக் கதையில எங்களுக்கு இந்த அளவுதான் வேலைன்னு தெரியும். இன்னொன்னு இது ரஜினி சார் படம். அவர் கூட நடிக்கணும்ங்கிறதுதான் எங்க ரெண்டு பேருக்குமே பிரதான நோக்கமா இருந்தது. ஒரு ரசிகனாத்தான் நான் ரஜினி சார்கூட இருந்தேன். தூரத்திலேருந்து பாத்துக்கிட்டிருக்கிற ரசிகன் ஒருத்தனுக்கு, திடீர்னு 30 நாள் ரஜினி சார் கூடவே இருக்கிற அதிர்ஷ்டம் கிடைச்சா…? அதை விவரிக்க வார்த்தை இல்லைங்க.
செட்ல எங்க கூடத்தான் சாப்பிட்டார் ரஜினி சார். அவர் நினைச்சிருந்தா உலகத்திலேயே காஸ்ட்லியான கேரவன்ல சொகுசா இருந்திருக்க முடியும். ஆனா ஒரு நாள்கூட அவர் கேரவன் கேட்கல. அவரோட சீன் முடிஞ்சதும், என்கிட்டயும் கருணாஸ் கிட்டேயும் ஜாலியா சிரிச்சிப் பேசிக்கிட்டு, எங்களோட எதிர்காலத்துக்கான யோசனைகளை சொல்லி…. சான்ஸே இல்ல சார். இப்ப நினைச்சாலும் நெகிழ்ச்சியா இருக்கு. அவர் சினிமா சூப்பர் ஸ்டார் இல்ல. நிஜ சூப்பர் ஸ்டார்…,” என்றார்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே