ரஜினியை பற்றி அமெரிக்க பத்திரிகையில்…

ஆங்கில கட்டுரை: http://www.slate.com/id/2267820/

ஜாக்கிச்சான் ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் எண்பதுகளிலிருந்து நடிப்பதுடன் இல்லாமல், தயாரிப்பாளாரகவும், இயக்குனராகவும் இருந்துவந்தாலும், ரஷ் ஹவர், கராத்தே கிட் என பல ஹாலிவுட் படங்களின் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதிப்பவராக இருக்கிறார். ஆனால் ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகரில் இரண்டாவது இடம் யாருக்கு என்று கண்டிப்பாக உங்களால் கண்டிப்பாக யூகிக்க முடியாது. வழுக்கை தலையுடன் நடுத்தர வயது தொப்பையுடன் இந்தியாவில் தமிழ்நாடு என்ற இடத்திலிருந்து, எண்பதுகளில் காலாவதியான மீசையுடன் இருப்பாரென்று கண்டிப்பாக யூகித்திருக்க மாட்டீர்கள்.

ரஜின்காந்த் என்ற அவர் சாதாரண நடிகர் மட்டுமல்ல, யாருடைய கட்டுப்பாட்டுக்கும் அடங்காதவர். அவரை வர்ணிக்க வேண்டுமெனில், புலிக்கும் புயலுக்கும் பிறந்த ஒருவர் நிலநடுக்கத்தை மணம் செய்தால் அவருக்கு பிறப்பது ரஜின்காந்தாக இருக்கும். அதாவது அவர் படங்களில் கூறப்படுவது போல் சூப்பர் ஸ்டார் ரஜின்காந்தாக இருக்கும்.

நீங்கள் இதுவரை ரஜின்காந்தை பற்றி கேள்விப்படவில்லை என்றால் அக்டோபர் ஒன்று அன்று அறிந்து கொள்வீர்கள். அன்று தான் அவரின் எந்திரன் என்ற திரைப்படம் உலகம் முழுதும் வெளியாகிறது. அந்த படமே இந்தயாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட படங்களில் அதிக செலவில் தயாரானது ஆகும். உலக அரங்குகளில் இரண்டாயிரம் பிரிண்டுகளுக்கு மேல் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இந்தளவு அதிக செலவுக்கு காரணம், சண்டைக்கு யூவான் வோ-பிங் (The Matrix), அனிமேஷனுக்கு ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டூடியோ (Jurrassic Park), ஸ்பெசல் எபக்ட்ஸூக்கு ஜியார்ஜ் லூகாஸ், இசைக்கு ஏ.ஆர். ரகுமான் (Slumdlog Millionaire) என பல ஹாலிவுட் கலைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். இருந்த போதும் இவ்வளவு செலவையும் மீறி இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெறும் என அதன் தயாரிப்பாளர்கள் நம்ப காரணம் இது ரஜின்காந்த் என்ற நடிகரின் படம் என்பதால்.

அறுபத்தி ஒன்று வயதில் இதுவரை நூற்றி ஐம்பது படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் அவர் முழுமையான பாலிவுட் நடிகரல்ல. அவர் பாலிவுட்டைவிட சிறிய எல்லையில் வியாபாரமாகும் தமிழ் மொழியின் நடிகர் மட்டுமே. தமிழ் திரையுலகம் ஒளிப்பதிவாளர்களுக்கும் பரபரப்பான கதைக்களங்களுக்கும் பிரபலமானதாகும். ஆனால் இவரை விமர்சனங்களுக்கு (அவை நல்லவையாக இருந்தாலும்) அப்பாற்பட்டவராக நம்புவதே மற்ற பாலிவுட் நடிகர்களின் ரசிகர்களுக்கும் இவரது ரசிகர்களுக்கும் உள்ள வேறுபாடு. மற்ற பாலிவுட் நடிகர்களின் ரசிகர்களை கேட்டால் அந்த நடிகர்களின் குறைகளையும் சொல்வார்கள். உதாரணத்துக்கு ஹிருத்திக் சின்ன பையன் போல் இருக்கிறார், ஷாருக்கான் தவறுகள் புரிகிறார், அமிதாப் பச்சன் தொப்பி அணிகிறார் என்று ஏதாவது சொல்வார்கள், ஆனால் ரஜின்காந்தை பற்றிக் கேட்டால் அவர்கள் சொல்வது அவரின் பெருமைகளாகத்தான் இருக்கும். அவர்களை பொறுத்தவரை ரஜின்காந்த் என்பவர் சாதாரண நடிகர் அல்ல, அவர் ஒரு மாமனிதர்.

இந்திய இணையத்தளங்கில் அவரைப் பற்றிய பல நகைச்சுவைத் துணுக்குகள் உண்டு (உ.ம்: ரஜின்காந்தை ஒருமுறை பாம்பு கடித்துவிட்டது. நான்கு நாட்கள் கழித்து அந்த பாம்பு இறந்தே விட்டது என்று அவரது தீரத்தைப்பற்றி பல துணுக்குகள் காணலாம்). திரையில் அவர் விரலை நீட்டி பேசினால் பிண்ணனியில் சாட்டை சுழலும் சத்தம் வருமளவுக்கு அவரது பலத்தின் பிம்பம் காட்டப்படுகிறது. அதுமட்டுமல்ல திரையில் அவர் கோபபட்டால், கட்டுக்குள் வைக்க முடியாத மனிதக்குரங்கு நெஞ்சில் அடித்து தன் கோபத்தை தெரிவப்பது போலவும், புலி கர்ஜிப்பது போலவும் காட்டப்பட்டு அவரத் கோபத்தின் அளவுகோல் அத்தகையது என்று காட்டப்படுகிறது. திரையில் அவர் பஞ்ச் டயலாக்குகள் பேசும் நேரங்களில் ரசிகர்களை கவரும் வண்ணம் பிண்ணனி இசை ஆழப்படுத்தபடுகிறது. ‘நான் எப்படி வருவேன் எப்படி வருவேன் என் தெரியாது. ஆனா வரவேண்டி நேரத்துல கட்டாயம் வருவேன்’, ‘சொல்றத மட்டமில்ல சொல்லாததயும் செய்வேன்’ என்பதெல்லாம் அவரது குழப்பமான பஞ்ச் டயலாக்களுக்கு சில உதாரணங்கள். அவரது சண்டைக்காட்சிகளில் அடி வாங்குபவர்கள் மினிவேனில் முன் கண்ணாடி வழியாகவும் பிண் கண்ணாடி வழியாகவும் பறப்பதும் சர்வசாதாரணம்.

அவரது படங்களில் நகைச்சுவை, சண்டை, இசை (பெரும்பாலும் ஏ.ஆர். ரகுமான்) ஆகியவை சற்று தூக்கலாக இருக்கும். சந்திரமுகி (2005) என்ற படத்தில் மனநல மருத்துவராக வந்து பிறரின் முகத்தை வைத்தே மனதை அறிபவராக நடித்திருப்பார். அந்த படம் கல்யாணத்தில் ஆரம்பித்து, பின்னர் பேய் பங்களா என்ற பயணித்து நூற்றுக்கணக்கான பட்டங்களின் மூலம் வானத்தில் சூப்பர் ஸ்டார் என எழுத வைத்தப்பதாக படம் தொடங்கும். முடிவில் பட்டாசுகளுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான புறாக்கள் பறக்க, அரைகுறை ஆடையணிந்த ஒரு கராத்தே வீரனை அவர் மேலிருந்து அடித்து வீசுவதாக படம் முடியும். அந்த படம் அதுவரை வந்த ஏனைய தமிழ் படங்களைவிட வணிக ரீதியாக வெற்றி பெற்றதோடு, அவற்றைவிட அதிகமாக, கிட்டதட்ட எண்ணூறு நாட்கள் ஓடியது. அதுமட்டுமல்ல அந்த படம் ஜெர்மணியில் Der Geisterjäger என்ற பெயரில் வெளிவந்து குறிப்பிட்ட அளவில் வெற்றியும் பெற்றது.

ரஜின்காந்த் இருந்தால் திரையில் காமிரா மேலே கீழே அங்கே இங்கே என சுழன்று கொண்டே இருக்கும். படத்தொகுப்பும் அவர் மற்றவர்களை எவ்வளவு வேகமாக அடிக்கிறார் என்று உணர முடியாத அளவுக்கு வேகமாக ஈடு கொடுக்கும். அவரது எல்லா படங்களிலும், படத்தின் அவரது பெயரென்னவோ அதுவே அந்த படத்தின் பெயராக இருக்கும். அதுமட்டுமல்ல, எந்த படத்திலும் அவர் தோன்றும் முதல் காட்சியில் அந்த படத்தின் தலைப்பைக் கொண்டு ஆரம்பிக்கப்படும் பாட்டு மட்டுமல்ல, அவர் தோன்றும் விதமே பார்க்கும் நமக்கு மடத்தனமாகத்தான் இருக்கும்.

படையப்பா (1999) என்ற படத்தில் அவரிடம் ஒருவன் யார் நீ என்று கேட்க அதற்கு நான்கு நிமிடப்பாடலுடன் ஹார்மோனிக்காவில் இசைப்பது, காற்றில் விளையாடுவது, பிரமாண்டமான கராத்தே காட்சிகளை மேற்பார்வை இடுவது, இறுதியில் குழந்தையாக மாறுவது என அவர் செய்யும் கேலிக்கைகள் அப்பப்பா! அத்துடன் அந்த பாடல் முடியவில்லை, அதற்கு பிறகு அந்த கிராமத்து தலைவன் அவரின் பாட்டு திறமையை பாராட்ட, முப்பதடி உயரம் நிற்கும் மனிதர்களான கோபுரத்தில் ஏறி, மண் குடத்தை உடைக்க, பட்டாசுகள் வெடிக்க, மறுபடி அவரது கேலிக்கைகள் தொடரும்.

என்னதான் கேலிக்கையாக இருந்தாலும் அதில் உள்ள நம்ப முடியாத செயல்கள் கண்டிப்பாக முட்டாள்தனம்தான். சிவாஜி(2007) என்ற படத்தில் கணிப்பொறி வல்லுனராக வந்து அரசியல் மற்றும் வணிகத்துறையில் ஏமாற்றும் பணக்காரர்களை பழிவாங்குவார். Matrix படத்தில் உள்ளது போல் துப்பாக்கி தோட்டாக்கள் பறக்க, கிட்டார் துணை கொண்டு அவர்களை அடிப்பதும். ஸ்பெயினிலுள்ள Guggenheim Bilbao மியூசியம் முன் நின்று ‘அப்பத்தா வைச்ச கருப்பே, இப்பத்தான் செக்கச்சிவப்பே’ என்று பாடவதும் அந்த மொத்த படமும் அடிதடியுடன் ரசிகர்களை உசுப்பேத்தும் வகையிலேயே அமைந்திருக்கும்.

கேலிக்கைகளாக உணரப்பட்டாலும் ,அத்தகைய செயல்களே அவரின் அடையாளம். அவர் தலையில் துண்டு கட்டினால் கூட காளையை அடக்கப்போவது போல் ஸ்டைலாக செய்வதும், கூலிங் கிளாஸ் அணிவது ஏதோ லாஸ் வேகாஸில் நடக்கும் கண்காட்சிபோல் பார்க்கப்படுவதும் அவரது அடையாங்களே. அவரது நடிப்பே ஏதோ புதிய வகை ஜப்பானிய கபூக்கி நடனம் போன்று ஸ்டைலுடனே அடையாளப்படுத்தபடுகிறது. அவரது இந்த பாடலைப்போல ‘நீ நடந்தால் நடை அழகு, நீ சிரிக்கும் சிரிப்பு அழகு’ என்று அவரது எல்லா அசைவுகளையுமே ஸ்டைலாக அர்த்தம் செய்யப்படுகிறது. பாலிவுட் படங்கள் பெரும்பாலும் ஹாலிவுட் படங்களை காப்பி அடித்து கொண்டிருக்க, இவரது படங்கள் இன்னமும் அம்மா சென்டிமென்ட், பெண்களுடன் மோதல், ஏழைக்கு உதவுதல் என்ற வட்டத்திலேயே இருக்கிறது.

பாலிவுட் படங்களில் MTV வகை பாடல்களின் ஆதிக்கத்தால் தவிர்க்கபட்டுவரும் மசாலா வகை நடனங்கள் இன்னும் இவர் படங்களில் உயிர் வாழ்கின்றன். அவரது படப்பாட்டுகளில் கூறப்படுவதுபோல் அவரிடம் மற்றவர்களை வசிக்கும் காந்த சக்தி இருக்கிறது. அது மட்டுமல்ல, அவர் இந்திய எல்லைக்குள்ளேயே வளர்ந்து விருட்சமாய் வேரூன்றி இருக்கும், ஹாலிவுட் தேவைப்படாத, கதாநாயகன். சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் ஆரம்பிக்காத, அவர் முதல்முறை தோன்றும்போது அவரது புகழ்பாடும் பாட்டில்லாத, மிகவும் கடினமான திரைக்கதை இல்லாத, ஒரு அடியில் எதிராளி மின்கம்பத்தை உடைத்துக்கொண்டு விழும் சண்டை இல்லாத படம் கண்டிப்பாக அவர் படமாக இருக்காது.

அவருடைய இத்தகைய கேலிக்கை ஷேஷ்டைகள் சிரிப்புக்குள்ளவையாக இருக்கலாம். ஆனால், இந்த அக்டோபர் ஒன்றாம் தேதி வெளியாகும், அவர் எந்திர மனிதனாக நடித்திருக்கும் எந்திரன் என்ற படம் கண்டிப்பாக சரித்திரம் படைக்கும். ஏனெனில் பிரஞ்சில் புகழ்பெற்ற நடிகரான Cyrano de Bergerac போல் இந்தியாவின் ஸ்டைல் மன்னர் அவர். அவருக்கு பின்னரும் அவரது புகழும் ஸ்டைலும் கண்டிப்பாக மக்களின் நினைவில் இருக்கும்.

நன்றி : http://kathirka.blogspot.com/2010/10/blog-post_21.html

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago