சௌந்தர்யா ரஜினியின் இயக்கத்தில், எந்திரனுக்கு முன்பே துவங்கிய இந்த அனிமேஷன் படத்தின் வேலைகள், எந்திரன் ரிலீசுக்காக தள்ளி வைக்கப்பட்டன. இடையில் சௌந்தர்யாவின் திருமணமும் நடந்து முடிந்தது.
இப்போது சுல்தான் என்கிற ஹராவின் பணிகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன.
இந்தப் படத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகளை கேஎஸ் ரவிக்குமார் இயக்குகிறார். மீதி அனிமேஷன் வடிவில் வரும் காட்சிகளை சௌந்தர்யா கவனிக்கிறார். இவற்றில் பெரும்பாலானவை ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டதால், மீதிக் காட்சிகளை ரவிக்குமாரே எடுப்பார் என்கிறார்கள்.
ஏ ஆர் ரஹ்மான் இசையில் 5 பாடல்கள் இடம்பெறுகின்றன. இந்தப் பாடல்களையும் ரவிக்குமாரே படமாக்குவார் என்று தெரிகிறது.
சுல்தான் படத்தின் சிறப்பே, அதன் மொத்தக் காட்சிகளும் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாகின்றன என்பதுதான். அவதார் படத்தின் Motion Capturing மற்றும் Performance capture தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் நிறுவனங்களுடன் இணைந்து இதற்கான அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் பணிகளை ஆக்கர் ஸ்டுடியோஸ் மேற்கொள்ளவிருக்கிறது. அனைத்து விஷயத்திலும் எந்திரனை விட மேம்பட்ட பொழுதுபோக்குப் படமாக சுல்தான் (ஹரா) அமைய வேண்டும் என்பதால், படத்தில் பல புதிய முயற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறார்களாம்.
உலகம் முழுவதும் எந்திரனை விட பிரமாண்டமாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ள சுல்தானை, ஜெமினி நிறுவனமும், சன் பிக்சர்ஸும் கூட்டாக வெளியிடும் எனத் தெரிகிறது
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே