எந்திரனின் வெற்றி எனக்கு அதிக தமிழ்ப் படங்களில் நடிக்கும் ஆர்வத்தையும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. முன்பைவிட இப்போது இன்னும் வசதியாக உணர்கிறேன், என்கிறார் ஐஸ்வர்யா ராய்.
உலக அழகியாக தேர்வு பெற்ற கையோடு ஐஸ்வர்யா ராய் நடிக்க வந்துவிட்டார். அவர் நடித்த முதல் படம் மணிரத்னத்தின் இருவர். ஆனால் அவர் முதலில் வெற்றியை ருசி பார்த்தது ஷங்கரின் ஜீன்ஸ் படத்தில்தான்.
அதன்பிறகு தமிழில் அவர் நிறைய படங்கள் நடிக்கவில்லை. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன் என சில படங்களே நடித்தார். இந்தியில் படுபிஸியாக இருந்தவர் எந்திரனில் ரஜினிக்கு ஜோடியானார். இதுவரை அவரது திரைவாழ்க்கையில் அவர் காணாத வெற்றியை எந்திரன் தந்துள்ளது.
அந்த வெற்றி தந்த நம்பிக்கையில் ஐஸ்வர்யா இப்படிப் பேசுகிறார்:
“இருவர், ஜீன்ஸ் நடித்தபோது இல்லாத தன்னம்பிக்கையும் தைரியமும் எனக்கு இப்போது வந்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு நிறைய முறை போயிருக்கிறேன். தங்கியிருக்கிறேன். அந்த மொழி எனக்கு நன்கு பரிச்சயமானது. பேசினால் புரிந்து கொள்வேன். ஏன்… ஓரளவு பேசவும் செய்வேன். ஆனால் தமிழ்மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதனால்தான் அதை பேசிக் கெடுக்காமல் இருந்தேன்.
இப்போது நன்கு கற்றுக் கொண்டுள்ளேன். என்னால் தெளிவாக, தடுமாற்றமின்றி படங்களில் தமிழைப் பிரயோகிக்க முடியும். அதனாலேயே நிறையப் படங்கள் செய்ய விரும்புகிறேன்.
எந்திரனில் நடித்தது பற்றிக் கூறும்போது, “இதுபோன்ற வேடங்களை அடிக்கடி செய்ய முடியாது. அதற்கான வாய்ப்புகள் குறைவு. அப்படி எனக்கு அரிதாகக் கிடைத்த வேடத்தை சிறப்பாகச் செய்ய முடிந்தது. ஷங்கருக்கு நன்றி. முன்பைவிட இப்போது அவரை நன்கு புரிந்து கொண்டேன். அவர் நினைத்ததை என்னால் திரையில் தர முடிந்தது” என்றார்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே