திமிங்கிலங்கள் அதிக தூரம் கடலில் நீந்தி தனது வாழ்வாதார இடங்களைக் கண்டுபிடித்துக் கொள்ளும் என்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் 9,800 கி.மீ. தொலைவு கடலுக்கு அடியில் நீந்தி கண்டம் விட்டு கண்டம் சென்ற கூன் முதுகுப் பெண் திமிங்கிலம் ஒன்றை கடல் உயிரியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டு பிடித்து அதிசயித்துள்ளனர்.
பிரேசிலிலிருந்து மடகாஸ்கருக்கு நீந்திச் சென்ற இந்த திமிங்கிலம் பற்றிய செய்தி பல்வேறு கேள்விகளையும் சுவையான தகவல்களையும் நமக்கு எதிர்காலத்தில் அளிக்கலாம் என்று இந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக அதிக தூரம் நீந்துவது ஆண் திமிங்கிலங்களே ஆனால் அதுவும் இவ்வளவு தூரம் மராத்தான் நீச்சல் அடித்ததாக வரலாறு இல்லை என்று கூறியுள்ளனர் விஞ்ஞானிகள்.
இவ்வளவு தூரம் அது நீச்சல் அடித்து இடப்பெயர்வு செய்துள்ளது என்பதை விட நடுவில் உள்ள இரண்டு திமிங்கில வாழ்வாதார இடத்தையும் தாண்டி 90 டிகிரி நேர் கோட்டில் அது பிரயாணித்துள்ளது.
முதலில் பிரேசில் கடல்பகுதியில் 1999ஆம் ஆண்டு இந்தத் திமிங்கிலத்தைக் கண்டுள்ளனர். அனால் இரண்டு ஆண்டுகள் கழித்து மடகாஸ்கரில் அதே திமிங்கிலம் வந்துள்ளதையும் கடல் உயிர்வாழ் உயிரினங்கள் ஆய்வாளர் ஒருவர் கண்டுபிடித்தார்.
இந்த வகையான திமிங்கிலங்கள் அரிதாகி வரும் சூழ்நிலையில் இந்த நீண்ட தூர இடப்பெயர்வு அந்த இனம் அழிவிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறது என்று இது பற்றி செய்தி வெளியிட்டுள்ள நேச்சர் இதழ் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் இந்தக் கூன்முதுகுப் பெண் திமிங்கிலம் ஏன் இத்தனை தூரம் இடம்பெயர்ந்தது என்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே