எம்ஜிஆர் காலத்திலிருந்தே பத்திரிகைகள் எங்களுக்கு ஆதரவு தந்ததில்லை. பத்திரிகைகளை நம்பியும் நாங்கள் இல்லை, என்றார் ஜெயலலிதா .
மதுரை கூட்டத்தில் அவர் பேசுகையில், “கோவை கூட்டத்திற்கு 8 லட்சம் பேர் திரண்டதை பத்திரிகைகள் செதியாக வெளியிட்டிருந்தன. இதை பொறுக்க முடியாத கருணாநிதி , பத்திரிகைகளை மிரட்டினார். திருச்சி கூட்டத்திற்கு 18 லட்சம் பேர் திரண்டனர். இதை பத்திரிகைகள் இருட்டடிப்பு செதுவிட்டன.
என்னிடம் பேசிய வடமாநில தலைவர்கள், கோவை கூட்டம் குறித்து பாராட்டினர். ஆனால் திருச்சி கூட்டம் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்ததுதான் காரணம். எனது கூட்டங்களுக்கு வாகனங்கள் தரக்கூடாது என உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர். கருணாநிதி சொல்வதை ஊடகங்கள் கேட்காவிட்டால் அந்த ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள் மறுக்கப்படுகின்றன. ஊடகங்களும் இதற்கு பயந்து கொண்டு கருணாநிதிக்கு ஆதரவாகவே செய்தி போடுகின்றன.
திருச்சி கூட்டத்திற்கு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டனர் என கருணாநிதி கூறினார். ஆனால் உண்மையில் கூட்டத்தை தடுப்பதற்காகதான் போலீசாரை அனுப்பினார். இந்த தடையை மீறி மக்கள் வெள்ளமென திரண்டனர். திருச்சி கூட்டத்தில் பணத்தை அள்ளி செலவழித்தார் கருணாநிதி. அப்படியும் கூட்டம் வரவில்லை. ஆனால் அதை ‘ஆஹா… ஓஹோ…’ என எழுதச் சொன்னார். தமிழகத்தின் பத்திரிகைகளுக்கு மனச்சாட்சி உண்டா, என அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும்.
கருணாநிதி மிரட்டல்களுக்கு பத்திரிகைகள் பயந்துவிட்டன. மதுரையின் பிரம்மாண்ட கூட்டம் பற்றி உண்மையான செதியை வெளியிடுகிறனவா என்று நாளை பார்த்தால்தான் தெரியும். எம்ஜிஆர் காலத்திலிருந்தே பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை. மக்களை நம்பி உள்ளோம். தேர்தல் வரட்டும், மக்கள் முடிவு என்ன என்பது அப்போது தெரியும்…,” என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே