குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் நிகழ்ந்த கலவரத்தினால் முதலமைச்சர் நரேந்திர மோடி மீதும், அவரது பா.ஜனதா கட்சி மீதும் இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்ட வெறுப்பும், கோபமும் மெல்ல மெல்ல மறைந்து வருகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது அண்மையில் அங்கு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், பவநகர், ஜாம்நகர் ஆகிய 6 மாநகராட்சிகளிலும் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது.
இந்த 6 மாநகராட்சிகளில் மொத்தமுள்ள 558 இடங்களுக்கு 2,100 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில், பா.ஜனதா 6 மாநகராட்சிகளிலும் அமோக வெற்றிபெற்று அவற்றை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
அகமதாபாத் மாநகராட்சியில் பா.ஜனதா 129 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
சூரத்தில் பா.ஜனதாவுக்கு 95, காங்கிரஸ் 4, ராஜ்கோட்டில் பா.ஜனதா 58, காங்கிரஸ் 8, வதோதராவில் பா.ஜனதா 61, காங்கிரஸ் 7, ஜாம்நகரில் பா.ஜனதா 35, காங்கிரஸ் 16, பவநகரில் பா.ஜனதா 41, காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மேற்கூறிய 6 மாநகராட்சிகளிலும் வெற்றி பெற்ற பா.ஜனதா, தற்போது மீண்டும் அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது அம்மாநில அரசியல் நோக்கர்களின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.
அரசியல் நோக்கர்கள் மட்டுமல்லாது, தேர்தலில் வெற்றிபெற்ற பா.ஜனதா கவுன்சிலர்களும், தேர்தல் முடிவையும், தங்களது வெற்றியையும் சற்றே ஆச்சரியத்துடன்தான் பார்க்கின்றனர்.
இது குறித்து வெற்றி பெற்ற பா.ஜனதா கவுன்சிலர்களில் ஒருவரான இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பாபி ஷாமா கூறுகையில், “மாநகராட்சி தேர்தல் முடிவை பார்க்கும்போது, முதலமைச்சர் நரேந்திர மோடி மீதும், அவரது பா.ஜனதா கட்சி மீதும் இருந்த வெறுப்பையும், கோபத்தையும் குஜராத் முஸ்லிம்கள் கைவிட்டுவிட்டதாகவே தெரிகிறது” என்கிறார்.
ராஜ்கோட் நகரின் 18 ஆவது வார்டில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள முதல் இஸ்லாமிய பெண்ணான பாபி ஷாமா, “இஸ்லாமியர்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதையே தேர்தல் முடிவு காட்டுகிறது.
இந்த மாற்றம் எனது வார்டில் மட்டும் நடக்கவில்லை. மாநிலம் முழுவதுமே ஏற்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் பா.ஜனதாவை நோக்கி வருகிறார்கள்” என்றும் கூறுகிறார்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே