எல்லோருக்கும் வணக்கம்
எந்திரன் தி ரோபோ இப்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. எந்திரனின் போஸ்ட் ப்ரெடெக்ஷன், விளம்பரம், தியேட்டர் விசிட் களால் என்னால் உங்களை நீண்ட நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்த படத்தை ரசித்து பாராட்டி வரும் எல்லோருக்கும் நன்றி, குறிப்பாக ஊடங்கள் எந்திரனை பாராட்டிய ஊடங்கள் பெரும்பாலும் 5 ஸ்டார்களும் மற்றவர்கள் 4-5 வரை ஸ்டார் கொடுத்து எங்களை ஊக்குவித்துள்ளார்கள். இந்த படம் தென்னிந்தியா, வட இந்தியா மேலும் உலகம் முழுக்க செய்து வரும் வசூல் சாதனைகள் எங்களை மேலும் சந்தோசப்படுத்தியுள்ளது.
படம்பார்த்த இந்தியாவின் பெரிய நடிகர்கள் அனைவரும் நேரிலும் போனிலும் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்கள் அவர்களுக்கும் நன்றி, படம் பார்த்த அமீர்கான் என்னை வீட்டுக்கு ஆழைத்து விடியும் வரை அவரும்அவர் மனைவி கிரணும் இந்த படம் பற்றி என்னிடம் விசாரித்தார்கள்.
ஹிர்திக் ரோஷன் தொடர்பு கொண்டு படம் பார்த்த பரவசத்தை என்னுடம் பகிர்ந்து கொண்டார்.
கமல் அருமையான வாழ்த்து செய்தியுடன் பூங்கொத்தை பரிசளித்தார்.
கர்நாடகாவில் இருந்து உபேந்திரா, பிரகாஷ்ராஜ், டைரக்டர்கள், உதவியாளர்கள், டெக்னிஷியன்கள் அனைவரும் படம்பார்த்து பாராட்டு தெரிவித்த வண்ணமே இருக்கிறார்கள்..
என்னை பரவசப்படுத்திய பாராட்டு என்றால் கே.பியிடம் இருந்து வந்த அந்த பாராட்டு கடிதம்தான். 30 வருடமாக ஒரு சிறந்தவெற்றியாளராக தமிழ் சினிமாவில் திகழ்பவர் அவர். என்னுடைய ரோல் மாடலான அவரைப்போல் நானும் குறைந்தபட்சம் 15 வருடமாவது இந்த துறையில் இருக்கவேண்டும் என்று நினைத்தேன். அவரின் பாராட்டு கடிதம் என்னை மேலும் நெகிழ செய்தது. அவரின் பாராட்டு என்னை மேலும் கடினமாக உழைக்க தூண்டி இருக்கிறது
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே