- எந்திரன் படத்துக்கு திரைக்கதை – வசனம் எழுதியவர், எழுத்தாளர் சுஜாதா. 2008ம் ஆண்டு அவரது மறைவுக்கு பின், கதையில் சின்னச் சின்ன டெக்னிக்கல் அப்டேட்களுக்காக மட்டுமே 250 பேர் வேலை பார்த்து இருக்கிறார்கள். ‘சுஜாதா சார் ஒருவருக்குப் பதிலா 250 பேர் தேவைப்படுறாங்க பாருங்க… சுஜாதா சார் வாஸ் ரியலி கிரேட்!’ என ஷங்கர் நெகிழ்ந்தார். இப்போது பட டைட்டிலில்… வசனம் – சுஜாதா, ஷங்கர், கார்க்கி.
- சின்ன வயதில் சுஜாதாவை அனைவரும் ‘ரங்குஸ்கி’ என்றே அழைப்பார்காளாம். அந்தப் பெயரை எந்திரன் படத்தில் வரும் கொசு ஒன்றுக்கு சுஜாதா சூட்டி இருந்தார்.
- சிவாஜி படம் வெளியான சமயத்தில் ரஜினி மொட்டை பாஸ் கேரக்டரில் வருவதை ரசிகர்களுக்கு சஸ்பென்ஸாக வைத்து இருந்தார் ஷங்கர். அது பெரும் வரவேற்பை பெற்றது. ரஜினி ஆசைப்பட்டார் என்று எந்திரன் படத்திலும் கடைசி 45 நிமிடங்கள் ரஜினி வித்தியாசமான கேரக்டரில் வருவது போல் உருவாக்கி இருக்கிறார் ஷங்கர். அது என்ன கேரக்டர் என்பது சஸ்பென்ஸ்.
- எந்திரன் படத்தில் முக்கியமான காட்சிக்கு ஒன்றுக்கு இசை அமைப்பதற்கு 60 லட்ச ரூபாய் செலவு ஆகும் என்று கூறி இருக்கிறார், ஏ.ஆர்.ரகுமான். காட்சிக்கு தேவைப்பட்டால் கூட 70 லட்சம் கூட தருகிறேன் என்று கூறினாராம் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.
- எந்திரன் படத்தில் வரும் ஒரு காட்சிக்காக ஒரு அட்டைப் பெட்டிக்குள் சுமார் 7 மணி நேரம் கை, கால்கள் எதுவும் அசையாமல் உட்கார்ந்து சிரத்தையுடன் நடித்து கொடுத்திருக்கிறார், ரஜினி
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படங்களில் மிக அதிக பொருட்செலவில் உருவான படம் எந்திரன். இப்படத்தின் பட்ஜெட் ரூ.190 கோடி. இதில் 40% (ரூ.76 கோடி) கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மட்டும் செலவிடப்பட்டுருக்கிறது.
- தமிழில் ஆடியோ உரிமையை THINK இசை வெளியூட்டு நிறுவனம் ரூ.7 கோடி கொடுத்து வாங்கியது. இதுவரை எந்த ஒரு தென்னிந்திய திரைப்படத்தின் ஆடியோ உரிமையும் இவ்வளவு விலைக்கு விற்பனை ஆனது இல்லை.
- எந்திரன் ஆடியோ வெளியான அடுத்த நாளே அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஐ.டியூன்ஸில் முதல் இடத்தை பிடித்தது. இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படத்தின் பாடல்களும் வெளியான அடுத்த நாளே ஐ.டியூன்ஸில் டாப் 10-ல் இடம் பிடித்தது இல்லை.
- எந்திரன் பாடல்கள் வெளியான ஒன்றரை மணி நேரத்தில் ஒன்றரை கோடி சிடிக்கள் விற்று சாதனை படைத்துள்ளது. தமிழ்த் திரைப்பட சிடி விற்பனையில் இதுவரை இருந்த எல்லா சாதனைகளையும் ‘எந்திரன்’ ஆடியோ சிடி முறியடித்தது.
- ‘ஸ்பைடர்மேன்’ படத்தை அடுத்து உலகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் வெளியாகும் படமாக எந்திரன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
View Comments
‘ஸ்பைடர்மேன்’ படத்தை அடுத்து உலகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் வெளியாகும் படமாக எந்திரன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது///
ரீல் விடறதுக்கும் கொஞ்சம் அளவு இருக்குங்க. பொய்சொன்னாலும் பொருந்த சொல்லணும்னு சொல்லுவாங்க,
எந்திரனைப் பத்தி என்ன எழுதினாலும் படிச்சிருவாங்கன்னு, படம் பார்க்காமயே எழுதினா இப்படித்தான் இருக்கும்.
இப்போ ஓடிட்டி இருக்கிற சோஷியல் நெட்வொர்க் படம் கூட மூவாயிரம் தியேட்டர்ல ஓடுது..
அவதார் மூவாயிரம் தியேட்டருக்கும் மேல..
மொதல்ல தகவலை உறுதி செய்யுங்கப்பா.
http://www.boxofficemojo.com/movies/?page=weekend&id=avatar.htm