இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தனது ‘அறிவின் குழந்தை’ என்று பெருமையாக ‘ஏழாம் அறிவு’ படத்தைக் கூறுவதுண்டு.
கஜினி படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சூர்யா- முருகதாஸ் கூட்டணி இந்தப் படத்தில் தொடர்கிறது.
இந்தப் படத்தில் சூர்யாவை மிகவும் அழகாகவும் அதே நேரம் மாறுபட்ட கெட்டப்பிலும் காட்டவிருக்கும் முருகதாஸ், ஒரு வித்தியாசமான பாராட்டையும் சூர்யாவுக்கு வழங்கினார்.
ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் சூர்யா, பிரியாமணி, விவேக் ஓபராய் ஆகியோர் நடித்துள்ள ‘ரத்தச்சரித்தம்’ இசைவெளியீட்டு விழாவில் தான் சூர்யாவுக்கு முருகதாஸிடம் இருந்து வித்தியாமான புகழாரம் கிடைத்தது.
இவ்விழாவில் பேசிய முருகதாஸ், “ கஞ்சா, அபின் மாதிரிதான் சூர்யாவும். அவற்றை ஒரு முறை பழகிட்டா அதுக்கு அடிமையாகிட சொல்லும்.
அதே போல சூர்யாவை வைத்து ஒருமுறை படம் பண்ணிட்டா, அடுத்தடுத்தும் அவரை வைத்தே படம் பண்ணத் தோணும். நான் எந்தக் கதையை யோசித்தாலும் அதில் அவரை பொருத்திப் பார்க்க வைப்பார் சூர்யா.
இயக்குனர்கள் எல்லோருமே சூர்யாவோடு ஒரு படமாவது இயக்கணும். அதன் பிறகு வேற ஹீரோக்களை வைத்து படம் பண்ணுங்க.
ஆனால் சூர்யாவோடு ஒப்பிடும் போது, அது ரொம்ப கஷ்டமா இருப்பதை நீங்களே உணர்வீங்க” இப்படி சூர்யாவுக்கு பாராட்டுப் போதையேற்றினார் முருகதாஸ்.
மேலும், மணிரத்தினம் சாரை இப்பதான் இவ்வளவு நெருக்கமா பார்க்கிறேன். இந்த வாய்ப்பு சூர்யாவின் மூலமாகத்தான் கிடைத்துள்ளது. அதற்கு நன்றி சூர்யா.
“சென்னையில் ஷூட்டிங் இருக்கும் போது சொல்லுங்க. நான் 15 நாள் உங்களோட அசிஸ்டென்ட் டைரக்டரா வொர்க் பண்ணனும்” என மணிரத்தினத்திடம் தனது விருப்பத்தை தெரியப்படுத்தினார் முருகதாஸ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே