திங்கள்கிழமை மும்பையில் நடந்த ரஜினியின் ரோபோ இந்திப் படத்தின் சிறப்புக் காட்சியைக் காண பாலிவுட்டின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் திரண்டுவிட்டனர்.
தேவ் ஆனந்த், தர்மேந்திரா,அமிதாப் பச்சன், வினோத் கன்னா , அமீர் கான், ஹேமமாலினி, சன்னி தியோல், இயக்குநர்கள் சுபாஷ் கய், ராஜ்குமார் சந்தோஷி, சகரண் ஜோஹர், ராஜ் குமார் ஹிராணி,பிரேம் சேப்ரா, அஷுதோஷ் கோவாரிகர், ஊர்மிளா மடோண்ட்கர், அபிஷேக் பச்சன், ரமேஷ் சிப்பி, கிரண் கெர், ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் ஆஜராகியிருந்தனர்.
வராமலிருந்த ஒரே பிரபலம் ஷாரூக்கான்தான்!
பாலிவுட்டில் இத்தனை பிரபலங்களும் சமீபத்தில் ஒன்றுதிரண்டு பார்க்க வந்த ஒரே படம் ரஜினியின் ரோபோதான் என தெரிவித்துள்ளது பாலிவுட் ஹங்காமா.
படம் முடிந்ததும் அமிதாப்பச்சன் கூறுகையில், “ரோபோ மிகச் சிறந்த இந்தியப் படைப்பு. ரஜினி ஒரு அற்புதக் கலைஞர். இந்த இரண்டு விஷயங்களுக்காகத்தான் பாலிவுட் இங்கே வந்திருக்கிறது” என்றார்.
இயக்குநர் சுபாஷ் கய் கூறுகையில், “ரஜினிக்கு இணையான நடிகரைச் சொல்ல முடியாது. ரஜினி ரஜினிதான்” என்றார்.
தேவ் ஆனந்த் கூறுகையில், “இந்திய சினிமாவின் பெருமை ரஜினி… ரோபோ ரியல்லி ராக்ஸ்!”, என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே