- எண்ணிக்கையில் ரஜினியின் 154-வது படம், ஷங்கரின் இயக்கத்தில் 10-வது படம், ஐஸ்வர்யா ராயின் 5-வது தமிழ் படம். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் முதல் படம்..
- ‘இந்தியன்’ பட வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன், ப்ரீத்தி ஜிந்தாவை வைத்து ‘ரோபோ’ என்ற பெயரில் படம் எடுக்க ஆரம்பித்தார் ஷங்கர். சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது. பின்னர், ‘ரோபோ’வை ஷாருக்கான் நடித்து தயாரிக்கப் போவதாக செய்திகள் வெளிவரத் தொடங்கின. 2007ம் ஆண்டு ஷாருக்கானும் ஷங்கரும் தாங்கள் இப்படத்தை கை விட்டுவிட்டதாக அறிவித்தனர். தனக்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்காது என்பது ஷாருக்கானின் எண்ணம்.
- ரஜினி – ஷங்கர் இணைந்த ‘சிவாஜி’ படத்தின் வெற்றியை அடுத்து, தனது ‘ரோபோ’வில் ரஜினி நடிக்கிறார் என்று 2008-ம் ஆண்டு அறிவித்தார் ஷங்கர். ‘ரோபோ’ கதை ரஜினிக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டு, இப்போது எந்திரனாக வருகிறது.
- எந்திரனை முதலில் ஐங்கரன், EROS நிறுவனங்கள் கூட்டாக தயாரித்தன. ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, EROS அப்போது வாங்கி விநியோகம் செய்த படங்களும், ஐங்கரன் தயாரித்த படங்களும் தொடர் தோல்வியடைய, எந்திரன் படத் தயாரிப்பில் சிக்கல் வந்தது. பின்னர், இந்த இரண்டு நிறுவனங்களிடமிருந்து எந்திரன் படத்தை வாங்கி, தானே தயாரித்தது சன் பிக்சர்ஸ்.
- எந்திரன் படத்துக்காக நடிகை ஐஸ்வர்யா ராய் வாங்கிய சம்பளம் ரூ.6 கோடி. படத்தில் வில்லனாக நடித்து இருப்பவர், Danny Denzongpa.
- ரஜினி நடித்த சந்திரமுகி, சிவாஜி படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களில் வலம் வந்தவர்கள் வடிவேலு மற்றும் விவேக். ஆனால், எந்திரனில் ரஜினியுடன் காமெடி செய்திருப்பதோ சந்தானம் மற்றும் கருணாஸ்.
- Men in Black Series படங்களுக்கு காஸ்ட்டியூம் டிசைனராக பணியாற்றிய Mary E. Vogt, எந்திரனில் மனிஷ் மல்கோத்ராவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். Mary E. Vogt பணியாற்றிய முதல் இந்திய திரைப்படம் இதுவே!
- உலக அளவில் சூப்பர் ஹிட் படங்களான The Matrix, Crouching Tiger and Hidden Dragon ஆகிய படங்களுக்கு சண்டைக் காட்சிகள் வடிவமைத்த Yuen Woo Ping இப்படத்துக்கு பீட்டர் ஹெய்னுடன் இணைந்து சண்டை காட்சிகள் அமைத்திருக்கிறார்.
- Avatar, Star Wars, Titanic ஆகிய படங்களுக்கு ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் செய்த Industrial Light & Magic நிறுவனம், இப்படத்தில் பணியாற்றியுள்ளது. இந்த நிறுவனம் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் பிரிவில் இதுவரை 15 முறை ஆஸ்கர் விருதுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
- Aliens, Terminator 2 மற்றும் Jurassic Park ஆகிய படங்களுக்கு Animatronics செய்த Stan Winston Studios இப்படத்தில் பணியாற்றியுள்ளது.
- ரஜினியின் மேக்கப்புக்காக செலவழிக்கப்பட்ட தொகை ரூ.3 கோடி. சிகை அலங்காரத்துக்காக செலவழிக்கப்பட்ட தொகையில் தமிழில் ஒரு படமே தயாரிக்கலாம்!
- எந்திரன் படத்தில் நடித்ததற்காக ரஜினி இதுவரை சம்பளம் வாங்கவே இல்லை. ரீலிஸ் ஆகும் தினத்தில் சம்பளம் வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார்.
- எந்திரன் படத்தில் வரும் ‘கிளிமாஞ்சாரோ..’ எனும் பாடலை மிச்சு பிச்சு என்ற இடத்தில் படமாக்கி இருக்கிறார்கள். ஜேம்ஸ்பாண்ட் படமான ‘Quantum of Solace’ படத்துக்கு கூட அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கவில்லை. அங்கு நடந்த முதல் சினிமா ஷுட்டிங் ‘எந்திரன்’ தான்!
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி