இந்திய மக்கள் தொகை குறித்து கிண்டலடித்துப் பேசியுள்ளார் காமன்வெல்த் போட்டி தலைமை செயலதிகாரி மைக் ஹூப்பர். இதற்கு டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து டிவிக்கு ஹூப்பர் அளித்த ஒரு பேட்டியில், டெல்லி போக்குவரத்து நெருக்கடிக்கு இந்தியாவின் மிகப் பெரிய மக்கள் தொகைப் பெருக்கம்தான் காரணம் என்று கூறியிருந்தார். இதற்கு ஷீலா தீட்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஷீலா கூறுகையில், இது சற்றும் மென்மை இல்லாத பேச்சு. என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் பேசியுள்ளார் ஹூப்பர். இது கண்டிக்கத்தக்கது என்றார்.
ஆனால் ஹூப்பர் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக சப்பைக் கட்டு கட்டியுள்ளார் காமன்வெல்த் அமைப்பின் தலைவரான மைக் பென்னல். அவர் கூறுகையில், ஹூப்பர் பேசியதை தவறாக எடுத்துக் கொண்டுள்ளனர். அதேபோல போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து அவர் கூறியதையும், இந்திய அரசை குறை கூறியதாக தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்றார் பென்னல்.
சுரேஷ் கல்மாடி அன் கோவின் மகா குழப்பமான நடவடிக்கைள், ஊழல்களால் செத்த பாம்புக்கு சமமாக இன்று இந்தியாவை மாற்றி விட்டனர். இதனால் கண்டவரெல்லாம் கையில் கம்பெடுத்து அடிக்கும் அவலம் ஏற்பட்டு விட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே