இதர பிரிவுகள்,முதன்மை செய்திகள் சே! என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது?

சே! என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது?

சே!  என்னும் புரட்சித்தீ…. எப்போது  மண்ணில்  உதயமானது? post thumbnail image

சேகுவாராவின் இளமைப்பருவம்….!!

சேகுவாரா 1928ஆம் ஆண்டு ,ஜூன் மாதம் 14ஆம் தேதி அர்ஜென்டீனாவில் பிறந்தார் . ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ் மற்றும் சிலியா டெ ல செர்னா தம்பதியர்களுக்கு ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவராக பிறந்தார் .

அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து ஏர்னெஸ்டோ குவேரா டி ல செர்னா என பெயர் சூட்டினர்.

அப்போது குவேரா தம்பதிக்கு தெரிந்திருக்கவில்லை தனது மகனுக்கு வரலாற்றில் வேறு பெயர் பதிவு செய்யப்படும் என்பது. சேவிற்கு குறையற்ற விதத்தில் குழந்தை பருவம் அமைந்தது. சொந்தமாக மூலிகை, தேயிலை பண்ணையிருக்குமளவு வளமானது ஏர்னெஸ்டோவின் குடும்பம்.

இவர் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்குஇவருக்கு கிடைத்தது. இவரது தந்தை , சோசலிசத்தில் ஆதரவாளராக இருந்தார் .இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.

ஆஸ்துமா நோய்:

“சே”வுக்கு இரண்டு வயது இருக்கும் . நீச்சல் ஈடுபாடு கொண்ட அவரது தாய் , ஒரு குளிர் காலைப்பொழுதில் நதிக்கு தன் குழந்தையை அழைத்துச் சென்றார் .நடுக்கமூட்டும் குளிர் நதியில் தன் குழந்தையை அவர் நீராட வைக்க , ஈர உடையில் கிடுகிடுத்துக்கிடந்த குழந்தையின் நுரையீரலை நிமோனியா நோய் தாக்கி ,ஆஸ்துமா இவரை இறுகப்பற்றியது . வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்துமா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார்.

இவர் ஒரு சிறந்த “ரக்பி” விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை “பூசெர்” என்னும் பட்டப்பெயர் இட்டு அழைத்தனர்.

தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப்பழகிய சே குவேரா ,12வது வயதில் உள்ளூர் சுற்றுப்போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார் .வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார் .நெருடா, கீட்ஸ், மாச்சாடோ. லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்களின் மீது இவருக்கு சிறந்த ஆர்வம் இருந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி