இதர பிரிவுகள்,முதன்மை செய்திகள் புரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்?

புரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்?

புரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்? post thumbnail image

சேகுவாரா!!!

உலகம் முழுக்க சில பரிச்சயமான உருவ அமைப்புகள் பல பிரபலமாகும் , அது ஏன்?எதற்கு?எப்படி? என்று நம்மால் வரையறுக்க முடியாது.

அப்படியான ஒரு உருவம்தான் ,முக சவரம் செய்யப்படாமல் சிலுப்பிய தலையோடு ,சிகார் சகிதமாக ,கம்பீரமான ஆளூமையாக ,டி-சர்டில் இருந்து அமெரிக்காவின் ஹவாய் செருப்பு வரை ஒரு உருவம் பிரபலம் என்றால் அது சேகுவாரா தான்.

கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன். சேகுவாரா புரியாதவர்களுக்கு புதிர் புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்.

சேகுவாரா யார்?

ஏழைகளை அன்போடு அரவணைப்பவர் .

ஒரு சோசலிசப் புரட்சியாளர் ,மருத்துவர், அரசியல்வாதி.

மேலும் , கியூபா மற்றும் பல நாடுகளின் புரட்சிகளில் பங்கு பெற்ற போராளி எனப் பல முகங்களைக் கொண்டவர்.

சேகுவாரா என்றால் விடுதலை ,ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல் என்பதாகும்.

சேகுவாரா

சேகுவாரா எனகிற இந்த பெயர் உலக வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் சொல்லில் அடங்காதது. இந்த தேசத்தின் பிள்ளை என ஒரு தேசத்திற்குள் குறுக்கிவிட முடியாத வாழ்க்கை வாழ்ந்த போராளி ஆவார்.

வெனிசுலா, கொலம்பியா, பிரேசில் கியூபா, பொலிவியா, காங்கோ எனப் பல இடங்களில் கொரில்லா போர் முறைகளின் பின்னே சேகுவாரா நின்று இருந்தார்.

அடிப்படையில் மருத்துவரான இவர் ஆஸ்துமா நோயாளியாகவும் இருந்தார்.ஆனால், மருத்துவம் பார்த்து நோய்களை தீர்ப்பதை விட சமூகத்தின் அழுக்குகளை தீர்க்க வேண்டும் என்கிற உறுதி அவரிடம் இருந்தது.

அதற்கு முக்கியமான காரணம் தன் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்கா முழுக்க சுற்றியதுதான் அதோடு கார்ல் மார்க்கசையும் , லெனினையும் உள்வாங்கி படித்த அவர் ஏழைகளும் , பாட்டாளிகளும் படும் துன்பங்களை அறிந்த போதுதான் போராளியானார்.

தொடரும்……..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி