நலம் தரும் தாவரங்கள்-பிரண்டை

விளம்பரங்கள்

இதயம் காக்கும் !பசியின்மையை போக்கும்!வாய்வு, செரிமானக்கோளாறை நீக்கும் தாவரம்-பிரண்டை!

பிரண்டை , இதன் மற்றொரு பெயர் வஜ்ஜிரவல்லி என்ற பெயரும் உண்டு . இது கொடி வகையைச்சார்ந்தது.இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாகக்காணப்படுகிறது. மருத்துவக் குணமுடையது. பொதுவாக மனித நடமாட்டம் குறைவாகக்காணப்படும் பற்றைக்காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியது . இதன் சாறு உடலில் பட்டால் அரிப்பையும், நமச்சலையும் ஏற்படுத்தும் .இதன் வேர் மற்றும் தண்டுப்பகுதிகளே மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன.

அடிபட்ட வீக்கம் , சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது . துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும். ஞாபக சக்தியை பெருக்கும் , மூளை நரம்புகளை பலப்படுத்தும், எலும்புகளுக்கு சக்தி தரும் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும் வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெரும் ,உடல் வனப்பும் கூடும்.

எலும்புகள் சந்திக்கக்கூடடிய இணைப்புப்பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால் , தேவையற்ற நீர் தேங்கி விடும் .இதன் காரணமாக பலர் கழுத்து வலி முதுகு வலியால் அவதிப்படுவார்கள் . மன‍ழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால் , வயிறு செரிமான சக்தியை இழந்து விடும் அப்படிப்பட்ட சூழலில் இதைத் துவையல் செய்து சாப்பிட்டால் செரிமான சக்தியைத் தூண்டி விடும் .அஜீரணக் கோளாறுகளைப் போக்கும் .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: