இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் புகார்!

விளம்பரங்கள்

90 எம்.எல் படத்தில் ஆபாசமாக நடித்துள்ள நடிகை ஓவியாவை கைது செய்ய வேண்டும்.

90 எம்.எல் படத்தில் மிகவும் ஆபாசமாக நடித்துள்ள நடிகை ஓவியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி மகளிர் அணி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிர் அணி தலைவி ஆரிபா ரசாக் நேற்று சென்னை போலிஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதவாது:இந்திய கலாசார பண்பாட்டுக்கு எதிராக 90 எம்.எல் தமிழ் திரைப்படம் உள்ளது. படுக்கை அறை ரகசியங்கள், மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இளைஞர்களை கெடுக்கும் வகையில் அமைந்துள்ளது.படத்தின் வசனத்திலும் ஆபாச வார்த்தைகள் உள்ளன.

இந்த படத்தில் ஆபாசமாக நடித்துள்ள நடிகை ஓவியா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் . இந்த படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர் நடிகைகள் மீதும் , இயக்குனர் அனிதா உதீப் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். படத்தை உடனே தடை செய்ய வேண்டும் .இது போன்ற கலாசார பண்பாட்டுக்கு எதிரான படங்களை இனிமேல் தணிக்கை குழுவினர் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: