தென்னாட்டு மொழியினம்:பாகம்-2

தென்னாட்டு மொழியினம்:பாகம்-2 post thumbnail image

தெலுங்கு:

தமிழ் நாட்டின் வடக்கேயுள்ள ஆந்திர மாநிலத்தில் பேசப்படும் மொழி இது. ஹைதராபாத்திலும் பலர் தெலுங்கு பேசுகின்றனர்.

வட மொழியாளர் தெலுங்கை ஆந்திரம் எனச் சுட்டுவர் .பழந்தமிழ் இலக்கியம் ஆந்திரரை வடுகர் என்றும் அந்நாட்டை மொழி பெயர் தேயம் (மொழி வேறுபட்ட நாடு ) என்றும் கூறுகிறது.

தேன் போன்ற இனிமை உடைய மொழி என்னும் பொருளில் தெனுகு>தெலுகு >தெலுங்கு என்று பெயர் அமைந்திருக்கலாம் என்பர். கலிங்கம் முதலான மூன்று லிங்கக் கோயில்களை உடையது என்னும் பொருள் பொதிந்த சொல்லாகிய திரிலிங்கம் என்பது திரிந்து தெலுங்கு ஆயிற்று என்பர் ஒரு சிலர்.

இதன் எழுத்து முறை தேவநாகரியை ஒட்டி அமைந்தது.தேவநாகரி எழுத்துடன் திராவிட மொழிக்கு இன்றியமையாத ‘ற’ கர எழுத்தும் பெற்றுள்ளது.

வடமொழி அறிஞர்களாகிய நன்னயப்பட்டர் முதலானோர் இலக்கியம் எழுதி வளர்த்தமையால் இம் மொழியில் வடமொழிச்சார்பு மிகுதி.

நன்னயருக்குப் பின் சைவப் புலவர் சிலர் வட சொற்கள் குறைந்த நடையைப் பின்பற்றினர்.இதை ‘ஜானு தெலுங்கு’ என்பர். எனினும் இம்முயற்சி வெற்றிபெறவில்லை.நன்னயரின் தெலுங்கே மக்களுக்கு விளங்கும் தெலுங்காக உள்ளது.

தொடரும்…………………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி