திராவிட மொழியினம்

விளம்பரங்கள்

பாகம்:1

உலக மொழிக்குடும்பங்களுள் திராவிட மொழிக்குடும்பமும் ஒன்று. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, தோடா, கோதா, படக, கோலமி, பார்ஜி, நாய்கி, கோத்தி, கூ, குவி, கோண்டா, மால்டா, ஒரொவன், கட்பா, குருக் என்பன இக்குடும்பத்தை சேர்ந்த மொழிகளாகும்.

இம்மொழிகளுள் இலக்கியம் பெற்ற தமிழ், தெழுங்கு, கன்னடம், மலையாளம், துளு,குடகு என்ற ஆறும் திருந்திய திராவிட மொழிகள் என அழைக்கப்படுகின்றன.ஏனைய மொழிகள் எழுத்தும் இலக்கியமும் அற்றவை.இவை திருந்தாத திராவிட மொழிகள் எனக் கூறப்படுகின்றன.

தமிழ்

தமிழகம் என்பது வடவேங்கடம் தென்குமரி ஆகியவற்றிற்கு இடைப்பட்ட பகுதியெனத் தொல்காப்பியத்திற்குப் பாயிரம் வரைந்த பனம்பாரனாரால் சுட்டப்பெறுகின்றது. தமிழ் மொழி தற்போது இலங்கையில் வடபகுதியாகிய யாழ்ப்பாணத்திலும் வேறு சில பகுதிகளிலும் , பினாங்கு, சிங்கப்பூர் முதலிய கிழக்குத்தீவூகளின் பகுதிகளிலும் மொரிசியஸ் நாட்டிலும் மிகப் பலரால் பேசப்பட்டு வருகிறது.

திராவிட மொழிகளில் பிற மொழிக் கலப்புக் குறைந்த மொழியாகவும் , தொன்மை மிக்கதாகவும் இலக்கியவளம் நிறைந்ததாகவும் தமிழ் மொழி விளங்குகிறது.இம்மொழி தனிச்சிறப்பு பெற்றது.

தொடரும்………………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: