இந்திய அணி அபார வெற்றி!

விளம்பரங்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டோனி, ஜாதவ் அரைசதம் அடித்தனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டோனி, ஜாதவ் அரைசதம் அடித்தனர்.

கேப்டன்கள் கருத்து:

வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில் பந்து வீச்சாளர் தங்கள் பணியை சிறப்பாக செய்தனர். அவர்களால்தான் போட்டியில் வெற்றி பெற முடிந்தது.ஜடேஜா 10 ஓவர்களில் 35 ரன்களுக்கும் குறைவாக விட்டுக்கொடுத்தது வியப்புக்குரியது . டோனியும் கேதர் ஜாதாவும் பேட்டிங்கில் பொறுப்புடன் விளையாடினர். அவர்கள் ஆடிய விதத்தை பார்க்கவே மகிழ்ச்சி அளித்தது.அவர்களது பார்ட்னர்ஷிப் அற்புதமானது என்றார்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில் , நாங்கள் 20 முதல் 30 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம் . குறிப்பாக 10 ஓவர்களுக்கு பிறகு இன்னும் வேகமாக ரன்கள் எடுத்திருக்கவேண்டும் . எங்களது பந்து வீச்சாளர்கள் அருமையாக பந்து வீசினர் . ஆனால் இந்தியா எங்களை விட சிறப்பாக ஆடி விட்டது என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: