தொழில்நுட்பம் ஹலோ, நான் கிரகாம் பெல் பேசுறேன்!

ஹலோ, நான் கிரகாம் பெல் பேசுறேன்!

ஹலோ, நான் கிரகாம் பெல் பேசுறேன்! post thumbnail image

அலெக்சாண்டர் கிரகம் பெல் 1847-ம் ஆண்டு மார்ச்-3-ம் நாள் இங்கிலாந்தில் பிறந்தார் உலகின் கவனத்தை ஈர்த்த முக்கிய அறிவியல் அறிஞர்கள்,கண்டுபிடிப்பாளர்கள் வரிசையில் இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவர் 1876-ம் ஆண்டு தொலைபேசியை கண்டுபிடித்து தகவல் தொடர்பில் புரட்சி ஏற்பட அடிகோலினார்.

தொலைபேசி கண்டுபிடித்த பின் 9 வருடம் கழித்து அவர் புதிய முயற்சியாக, குரலை பதிவுசெய்யும் ஈடுபட்ட இவர் 1885-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதிஅவரது குரலை மெழுகு தடவிய காட்போர்ட் தகட்டில் பதிவு செய்துள்ளார்.

இது அமெரிக்காவில் உள்ள சுமித் சோனியன் அருங்காட்சியகத்தில் பழமையான ஒலித்தகடுகள் பாதுகாக்கும் பிரிவில் 138 வருடங்களாக பாதுகாக்கப்பட்டுவந்தது,

இந்நிலையில் அந்த தகட்டில் பதியப்பட்டிருக்கும் கிரகாம் பெல்லின் குரலை,கம்ப்யூட்டரின் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீட்டெடுத்துள்ளனர். அதில் அவர் “கேளுங்கள் என் குரலை -அலெக்சாண்டர் கிரகாம் பெல் “என்று கூறியுள்ளார்.

மேலும் இதில் வரிசையாக எண்களை கூறியுள்ளார். அத்துடன் மூன்றரை டாலர்கள்,ஏழு டாலர்கள் மற்றும் 29 சென்ட்டுகள் என்று பல பண மதிப்புகளையும் பதிவு செய்துள்ளார் இதனால் அவர் இதனை வணிக விசயங்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி