இதர பிரிவுகள் உலக வனவிலங்கு தினம்

உலக வனவிலங்கு தினம்

உலக வனவிலங்கு தினம் post thumbnail image

அழிந்துவரும் வன விலங்குகளைக் காப்பதற்காகவும், இயற்கைச் சமநிலை மாறுபடாதிருக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த தினத்தில் வன விலங்குகளின் பாதுகாப்பை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருவில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இன்றைய சூழலில் தோலுக்காக புலிகள், இறைச்சிக்காக மான்கள், தந்தத்திற்காக யானைகள் என மனிதனால் விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன. தற்போதுள்ள சூழ்நிலையில் விலங்குகளைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதை உணரும் வகையில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

நாட்டின் வேலியாய் விளங்கும் காடுகளையும் விலங்குகளையும் காப்பது குடிமக்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை கருத்தில் கொண்டு இளைஞர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி