என்றும் புகழ் மங்கா சிறப்புக்குரியவர்கள்

விளம்பரங்கள்

ரா.பி.சேதுப்பிள்ளை

எழுத்தாலும் செந்தமிழ்ச் பேச்சாலும் தமிழுக்குப் பெருமை சேர்த்த அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்த தினம் இன்று (மார்ச்-2) அவரைப் பற்றிய அரிய முத்துக்கள்

  • திருநெல்வேலி மாவட்டம் ராசவல்லிபுரத்தில் (1896) பிறந்தவர்.மூதுரை, நல்வழி, நீதிநெறி விளக்கம், தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களை சிறு வயதிலேயே கற்றார்.பாளையங்கோட்டை தூய சேவியர் பள்ளியில் உயர்நிலைக் கல்வி , திருநெல்வேலி இந்து கல்லூரியில் இன்டர்மீடியட் முடித்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
  • இவரது தமிழ் இன்பம் என்ற நூலுக்கு இந்திய அரசின் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. செய்யுளுக்கென்றே கருதப்பட்ட அடுக்குமொழி, எதுகை, மோனை, இலக்கியத்தொடர் என்ற அனைத்தையும் உரைநடையிலும் கொண்டு வந்தவர்.சொல்லின் செல்வர் என்று புகழப்பட்டார்.

குன்னக்குடி வைத்தியநாதன்

வயலின் என்றால் முதலில் நினைவுக்கு வருவது குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் தான்.வயலின் இசையால் , தனது ரசிகர்களை 61 ஆண்டுகளாக மெய்மறக்க வைத்து, அத்துறையில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த இவர் ( மார்ச்-2) இன்று பிறந்தார்.

இவர் பெற்ற விருதுகள்: கலைமாமணி விருது, சங்கீத கலா சிகாமணி விருது, சங்கீத நாடக அகாதமி விருது, இசைப் பேரறிஞர் விருது , பத்மஸ்ரீ விருது

இவர் மறைந்தாலும் இவரின் இசை காற்றில் இன்றும் ஒலித்துக் கொண்டேதான் உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: