தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்

விளம்பரங்கள்

வடஇந்தியர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிப்பதால், தமிழர்கள் தங்களின் அரசியல் அதிகாரத்தை விரைவில் இழந்து விடுவார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மக்களின் குடியிருப்பு பகுதிகள் கொரட்டூர் பகுதியில் அகற்றப்பட்டது . இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பத்தூரில் கண்டன கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற சீமான் கூறுகையில் ,

“கேரளாவில் 15 ஆண்டுகள் வசித்தால்தான் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை தரப்படுவதாகவும், ஆனால் தமிழகத்தில் 2 மாதங்கள் வசித்தாலே அனைத்து சலுகைகளும் கிடைக்கும் நிலை உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும், பெரிய விசயங்களை திசை திருப்பவே பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியிடப்படுவதாக தெரிவித்த அவர், திரையுலகில் மட்டுமன்றி அனைத்து துறைகளிலும் பாலியல் தொல்லை உள்ளதாக” தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: