அஜித் படத்தில் நஸ்ரியா !!

விளம்பரங்கள்

அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது இப்படம். இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தின் மூலம் நஸ்ரியா தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரியாவதாக கூறப்படுகிறது.நஸ்ரியா ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். கடைசியாக திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் நடித்திருந்தார்.

மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்ட நஸ்ரியா, சினிமாவில் இருந்து விலகினார். படத் தயாரிப்பின் மூலம் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்த நஸ்ரியா, கடைசியாக பிரித்விராஜ் ஜோடியாக கூடே என்ற படத்தில் நடித்திருந்தார். இரு படங்களை தயாரித்தும் வருகிறார்.

சரியான கதைக்காக நஸ்ரியா காத்திருப்பதாக தகவல் வெளியானது. நஸ்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில்,

தான் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வரப் போவதாகவும், முக்கிய அறிவிப்பு ஒன்று, விரைவில் வரும் என்றும் கூறியிருந்தார். நடிகை நஸ்ரியா தான் அஜித்தின் தீவிர ரசிகை.

அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

போனி கபூர் தயாரிக்கும் இன்னொரு படத்தை விஷ்ணுவர்தன் இயக்குவதாகவும், அதில் நஸ்ரியா அஜித்துடன் நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

இது பாலிவுட்டின் அமிதாப் நடித்த “பிங்க் ” படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.இதற்காக அஜித் 15 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: