சபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்

விளம்பரங்கள்

சபரிமலையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் 5 பக்தர்கள், 15 போலீஸ்காரர்கள் காயமடைந்ததாக தெரியவந்துள்ளது.இந்து அமைப்புகள் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன. சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அனுமதியால் அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு செல்ல வந்தனர்.

ஆனால், அவர்களை போராட்டக்குழுவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வன்முறையும் வெடித்துள்ளது. பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பெண் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். போலீசார் வன்முறையாளர்கள் மீது தடியடி நடத்தினர்.

இதில் 5 பக்தர்கள், 15 போலீசார் காயமடைந்ததாகவும், 10 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் கேரள அமைச்சர் கூறினார்.

இந்த வன்முறைக்கு ஆர்எஸ்எஸ் தான் காரணம் என்றும், போராட்டத்தின் பின்னணியில் அவர்கள் இருப்பதாகவும் அமைச்சர் ஜெயராமன் குற்றம் சாட்டினார்.

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: