பரபரப்பு செய்திகள் சபரிமலை தீர்ப்பை எதிர்த்து அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யாது – பினராயி விஜயன்

சபரிமலை தீர்ப்பை எதிர்த்து அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யாது – பினராயி விஜயன்

சபரிமலை தீர்ப்பை எதிர்த்து அரசு  சீராய்வு மனு தாக்கல் செய்யாது – பினராயி விஜயன் post thumbnail image
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் , அனைத்து வயதுடைய பெண்களையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப்போவதாக பந்தளம் அரண்மனை தகவல்கள் தெரிவித்திருந்தன. இந்த அரண்மனை தான் ஐயப்பன் கோயிலுக்கு ஆபரணங்களை அளித்து வருகிறது.

ஆனால், திருவிதாங்கூர் தேவஸ்தானம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடந்து வருகிறது . கேரள மாநிலத்தில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

நாளை சபரிமலை கோயில் திறக்கப்படவுள்ளதால் இதுதொடர்பான முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசிப்பதற்காக கோயிலின் தலைமை நிர்வாகிகள், தந்திரிகள் எனப்படும் தலைமை பூசாரிகள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் பினராயி விஜயன் ‘‘சட்ட ஒழுங்கை யாரும் அவர்களது கையில் எடுக்க நாங்கள் விடமாட்டோம். சபரிமலைக்கு பக்தகர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனைத்து வகை நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்.

கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது. கோர்ட்டின் உத்தரவை நடைமுறைப்படுத்துவோம் என்று நாங்கள் கோர்ட்டில் கூறியுள்ளோம்’’ என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி