வாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி !

விளம்பரங்கள்

வங்கி கடனுக்காக பாலியல் தொல்லை கொடுத்து,ஆசைக்கு இணங்க வற்புறுத்திய மேனஜரை ஒரு பெண் தடியாலும், செருப்பாலும் தாக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.கர்நாடக மாநிலம், தவனகரே மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் அங்குள்ள ஒரு வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்துள்ளார். கடன் அளிப்பதாகவும் அதற்கு பதிலாக அந்த பெண்ணை வங்கியின் மேனஜர் படுக்கைக்கு அழைத்துள்ளார்.

இதனால், அந்தப்பெண் வேதனையுடன் வங்கியில் இருந்து வெளியேறினார். ஆனால், தன்னை இழிவுப்படுத்திய மேனஜருக்கு தகுந்த பாடம் கற்பிக்க விரும்பிய அந்தப் பெண் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்ற வங்கி மேனஜரை வழிமறித்தார்.

நமக்கு லக் என நினைத்து ஆசையுடன் மேனேஜர் அவரை நெருங்கினார். சற்றும் தாமதிக்காமல் மேனேஜரின் சட்டையை பிடித்து இழுத்த அந்தப் பெண், கன்னட மொழியில் திட்டியவாறு அவரை சரமாரியாக தாக்கியதுடன், செருப்பாலும் அடித்தார்.

இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இவரைப்போல் தவறை உடனடியாக தட்டிக்கேட்பதுடன், அயோக்கியர்களை தோலுரித்துக் காட்டி தண்டிக்கும் துணிச்சல் அனைத்து பெண்களுக்கும் வர வேண்டும் என இந்த வீடியோவை பார்த்தவர்கள் கருத்துகளைகூறி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: