திமுக செய்தித் தொடர்பு செயலாளர் பதவியில் இருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிப்பு !!

விளம்பரங்கள்

டி.கே.எஸ்.இளங்கோவன் திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளராக பணியாற்றி வந்தார்.அந்தப் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ” திமுகவின் செய்தி தொடர்பு செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையடுத்து ,முழு உருவச் சிலை வரும் நவம்பர் 15 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்படவுள்ளது.

இந்த விழாவிற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இது தொடர்பாக டி.கே.எஸ்.இளங்கோவன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கலைஞர் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு அதிமுகவினரை அழைக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலினை ஆலோசிக்கமால் தன்னிச்சையாக கூறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: