சின்மயி விவகாரம் : இளையராஜா என்ன சொல்கிறார் தெரியுமா ?!

விளம்பரங்கள்

இசையமைப்பாளர் இளையராஜா தனது 75-வது வயது பிறந்த நாளை முன்னிட்டு பல கல்லூரிகளுக்கு சென்று , மாணவ-மாணவிகளுடன் தனது இசை அனுபவங்கள் பகிர்ந்து உரையாடல் நிகழ்த்தி வருகிறார்.

மாணவ – மாணவியர் இதனை மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகிறார்கள். இன்று சென்னை, எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இளையராஜா

” 4-வது தலைமுறையாக என்னுடைய பிறந்த நாளை இவ்வளவு ஆரவாரமாக கொண்டாடுவதில் உள்ளபடியே பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறினார்.

மாணவ – மாணவிகள் தங்கள் இடத்துக்கு அழைத்து பள்ளிக்கே ஒதுங்காத என்னை, என் பிறந்த நாளைக் கொண்டாடி பெருமைப்படுத்துவது மிகவும் உற்சாகமாக இருக்கிறது.

இனியும், எந்த கல்லூரியில் இருந்து அழைப்பு வந்தாலும் ஆர்வமுடன் கலந்து கொள்ள தயாராக இருக்கிறேன் என்று இளையராஜா பேசினார்.

நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு இளையராஜா பதிலளித்து வந்தார்.அதில் சின்மயி வைரமுத்து விவகாரம் தொடர்பான #Metoo குறித்து கேள்வியெழுப்பப்பட்டது .

அதற்கு இளையராஜா “இந்த கேள்வியை கேட்டுட்டு நீ இங்கேயே இரு கண்ணா… “என்று பதிலளித்துவிட்டு கடந்து சென்றார். இதற்கு முன்னர், சிம்பு-வின் பீப் நிகழ்ச்சி பரபரப்பாக இருந்தபோது, அது குறித்த கேள்வி கேட்ட நிருபரை இளையராஜா காய்ச்சி எடுத்ததை மறந்திருக்க முடியாது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: