பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் சின்மயிக்கு பாஜக ஆதரவு கரம் ! தமிழிசை ட்வீட் !

சின்மயிக்கு பாஜக ஆதரவு கரம் ! தமிழிசை ட்வீட் !

சின்மயிக்கு பாஜக ஆதரவு கரம் ! தமிழிசை ட்வீட் ! post thumbnail image
சந்தி சிரித்தபின் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர் என்று வைரமுத்துவை தமிழிசை கடுமையாக தாக்கியுள்ளார்.இதன் மூலம் சின்மயிக்கு ஆதரவளிக்கிறது பாஜக என நம்பப்படுகிறது.

MeToo வில் பலர் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். இது கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சின்மயியும் வைரமுத்து மீது ஒரு பாலியல் குற்றச்சாட்டைகூறியிருந்தார் . இதற்கு வைரமுத்து பதிலளித்த போது “உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும் ” என்று கூறியிருந்தார். மேலும், மறுப்பு தெரிவித்து வைரமுத்து இன்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

“குற்றசாட்டுகள் பொய்யானவை. வழக்கு பதிவு செய்தால் அதை சந்திக்க தயாராக உள்ளேன்” என்று அதில் கூறியுள்ளார்.

இதுகுறித்து பதில் அளித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் “சந்தி சிரித்தபின் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர் …நிந்திக்க அவகாசம் கொடுத்து ஒரு வாரம் கழித்து சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன?சந்தக்கவிஞர்மீது சந்தேகமே அதிகரிக்கிறது…” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி