சினிமாவில் சிகரெட் பிடிப்பது போன்று நடிக்கும் நாயகர்கள் எல்லாம் நல்ல தலைவர்கள் அல்ல : அன்புமணி பேச்சு !

விளம்பரங்கள்

சினிமாவில் சிகரெட் பிடிப்பது போன்று நடிக்கும் நாயகர்கள் எல்லாம் நல்ல தலைவர்கள் அல்ல என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறினார்.

சேலத்தில் மாணவர், மாணவியர் பங்கேற்றகேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நல்ல அரசியல் தலைவரை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று ஒரு மாணவி அன்புமணியிடம் கேட்டார்.

இதற்கு அன்புமணி கூறுகையில் ” எனக்கு சினிமா பார்ப்பது ரொம்ப பிடிக்கும். அதேபோல என் குடும்பத்திலும் அனைவருமே சினிமா பார்ப்போம். அது ஒரு பொழுதுபோக்கு. அவ்வளவுதான்.

அரிவாள், புகை பிடிப்பது ஆனால், பலரும் சினிமாவில் வருவதை நிஜம் என்று நம்புகிறார்கள். சினிமாவில் சிலர் புகை பிடிப்பவர்களாகவும், அரிவாள் எடுத்து வன்முறையில் ஈடுபடுபவர்களாகவும் வருகிறார்கள்.
இவர்களை பின்பற்றும் ரசிகர்களும் நாளை இதையே செய்ய மாட்டார்களா? சினிமாவில் சிகரெட் பிடிப்பது போன்று நடிக்கும் நாயகர்கள் எல்லாம் நல்ல தலைவர்கள் அல்ல. அரசியல் தெரிய வேண்டும்.

எனவே அரசியல் தலைவர்களாக வருபவர்கள், அவர்களை சார்ந்தவர்களை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க இருக்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் அவசியம் அரசியலை தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழகத்திற்கு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க முடியும்.” இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பதிலளித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: