இந்தியா அசத்தல் வெற்றி : தொடரையும் கைப்பற்றியது !

விளம்பரங்கள்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரக ஹைதராபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது .மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவை எதிர்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா மேற்கிந்திய தீவுகளை எளிதாக வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடந்தது . இதில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா அபாரமாக வென்றுள்ளது.

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் எடுத்தது. ரோஸ்டன் சேஸ் 106 ரன்கள் எடுத்தார். உமேஷ் யாதவ் 6 விக்கெட் ,குல்தீப் 3 விக்கெட் எடுத்தனர்.

இந்தியா பேட்டிங் செய்து முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுக்கு 367 ரன்கள் எடுத்தது. ரிஷாத் பண்ட் 92 ரன்கள் எடுத்தார். ஜேசன் ஹோல்டர் 5 விக்கெட் எடுத்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணி 10 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்தது. சுனில் அம்பரீஷ் 38 ரன்கள் எடுத்தார். உமேஷ் யாதவ் 4 விக்கெட் எடுத்தார். 74 ரன்கள் இலக்குடன் ஆடிய இந்தியா எளிதாக வென்றது.

கேஎல் ராகுல் 33 மற்றும் பிரித்வி ஷா 33 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு வழி வகுத்தனர் . 2 டெஸ்ட் தொடர் கொண்ட போட்டியில் இந்தியா 2-0 என்று தொடரை கைப்பற்றியது.

ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகனாக இளம் அறிமுக வீரர் பிரிதிவி ஷா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: