முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்!

விளம்பரங்கள்

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் காலமானார்.

அவருக்கு வயது 58. அடையாரில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார்.

6 முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரிதி இளம்வழுதி 1996 – 2001 காலகட்டத்தில் சட்டமன்ற துணை தலைவராகவும் ,

2006 – 2011 திமுக ஆட்சி காலகட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.கலைஞரால் பெரிதும் பாராட்டப்பட்டவர்.

திமுகவில் இருந்து 2013-ம் ஆண்டு விலகி அதிமுகவில் இணைந்தார். தற்போது டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் இருந்தார். அவரது திடீர் மறைவு அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: