தேவர் மகன் 2 அடுத்த படம் : உறுதி செய்த கமல் !!

விளம்பரங்கள்

இந்தியன் 2ம் பாகத்தை அடுத்து தேவர் மகன் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க உள்ளதாக கமல் அறிவித்துள்ளார்.

சூர்யாவின் சிங்கம் , விக்ரமின் சாமி,கமல்ஹாசனின் விஸ்வரூபம், ரஜினிகாந்த் எந்திரன் ,விஷால் சண்டக்கோழி ,சதுரங்க வேட்டை என பல படங்கள் இரண்டாம் பாகம் தமிழ் சினிமாவில் தயாராகி வருகின்றன.

தமிழில் இப்போது 2 – ம் பாகம் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. நடிகர் கமல்ஹாசனும் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து இயக்குவது பற்றி ஆலோசிப்பதாக தகவல் கசிந்தது. அதை கமல்ஹாசன் உறுதி படுத்தியுள்ளார். இன்று தந்தி டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட கமல்ஹாசன், ரசிகர்கள் முன்னிலையில், தேவர் மகன் 2ம் பாகம் உருவாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

தேவர்மகன் முதல் பாகம் 1992–ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் .கமல்ஹாசன், சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி நடித்து இருந்தனர். இந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன.

இந்தியன் – 2 படத்தில் நடிக்கிறார் கமல். இதன் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்க உள்ளது. தேவர் மகன் – 2 படப்பிடிப்பையும் விரைவில் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தி வெளியானவுடன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.ஒருசாரார் சாதிய பெருமை பேசும் படமா என கேள்வி எழுப்பியுள்ளனர் .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: