உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான் தான்- மெலானியா டிரம்ப்

விளம்பரங்கள்

சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்வது , தாக்கி பேசுவதற்கு எதிரான பிரசாரத்தை அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்ப் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் தந்த பேட்டியில் ,

” ஒருவர் மீது பாலியல் குற்றம் சுமத்தும் பெண்கள், வலுவான ஆதாரத்தை முன்வைக்க வேண்டும்.

இந்த உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான் தான் என்பதால், இந்த பிரசாரத்தை முன்னெடுத்து உள்ளேன்.

என்னைப் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்கள் உண்மையில் பார்க்க வேண்டும்.

அதனால்தான் எனது சிறந்த முன்முயற்சி சமூக ஊடக மற்றும் ஆன்லைன் நடத்தையை மையமாகக் கொண்டது. இது போன்ற கிண்டல்களை எதிர்கொள்ளும் வகையில் குழந்தைகளையும் தயார் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது .

சமூக உணர்ச்சிப் பழக்கவழக்கங்களை குழந்தைகளுக்கு நாம் கற்பிக்க வேண்டும், அதனால் அவர்கள் வளர்ந்து வரும் போது இது போன்ற சிக்கல்களை சமாளிப்பார்கள்” என அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: