செய்திகள்,பரபரப்பு செய்திகள் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் தற்கொலை !

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் தற்கொலை !

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் தற்கொலை ! post thumbnail image

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற இவர் ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையம் நடத்தி வந்தார். தமிழகம் முழுக்க பிரபலமானது இந்த அகாதமி . இந்நிலையில் அதன் நிறுவனர் சங்கர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டார்.

மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

திருச்செங்கோடு அருகே உள்ள நல்லன்கவுண்டம்பாளையம் கிராமத்தில் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர் சங்கர் தேவராஜன். மொத்தம் 4 முறை ஐஏஎஸ் சிவில் சர்விஸ் தேர்வு எழுதியுள்ளார்.

இதில் இரண்டு முறை இறுதிச்சுற்று சென்றார் . ஒருமுறை கூட தேர்வாகவில்லை. ஐஎஸ்எஸ் பயிற்சி மையம் ஆரம்பித்தால் என்ன என்று முடிவிற்கு வந்தவர் தொடங்கியதுதான் சங்கர் ஐஏஎஸ் அகாடமி.

720 ரூபாயை வைத்துக்கொண்டு சிறிதாக இந்த அகாடமி தொடங்கப்பட்டது. இங்கிருந்து 300 பேர் சிவில் சர்விஸ் பணிகளில் தேர்வாகிறார்கள்.நிறைய ஐஏஎஸ்களை உருவாக்கிய சிறப்பு இவருக்கு உண்டு.

கிராமப்புற மாணவர்களுக்கு நிறைய உதவி இருக்கிறார். பலருக்கு இலவசமாக பயிற்சி அளித்தவர் சங்கர்.இவரது தற்கொலை மரணம் பல மாணவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி