திரையுலகம் யுவனின் அடுத்த தயாரிப்பு !

யுவனின் அடுத்த தயாரிப்பு !

யுவனின் அடுத்த தயாரிப்பு ! post thumbnail image

யுவன் தயாரித்து இசையமைத்த படம் ” பியார் பிரேமா காதல் ” . ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடித்திருந்த ரொமான்டிக் காமெடி படம் இது .ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் .வசூலையும் வாரி குவித்தது.பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டாகின.

இயக்குனர் இலன் இந்த சூப்பர் ஹிட் படத்தை இயக்கினார். இந்நிலையில் இவரின் அடுத்த படமும் YSR பிலிம்சுக்கு தானம். தன் டீம்முடன் இயக்குனருக்கு அட்வான்ஸ் கொடுக்கும் போட்டோவை பகிர்ந்து, இலனுடன் மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளோம் என்று அறிவித்துள்ளார் யுவன் சங்கர் ராஜா .
இயக்குனரும் யுவன் மற்றும் டீம்முக்கு நன்றி சொல்லியுள்ளார். சென்ற வருடம் இதே நாளில் தான் அந்த படத்துக்கு ஒப்பந்தம் ஆனோம் என்று கூறியுள்ளார் .

 

 

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி