மைசூருவில் கோலகலமாக நடக்கும் தசரா விழா !!

விளம்பரங்கள்

விஜயதசமியை முன்னிட்டு கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் 10 நாட்கள் அரசு சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான தசரா விழா இன்று தொடங்கி 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இது 408-வது ஆண்டு தசரா விழா. இந்த ஆண்டு மழையால் தசரா விழாவை எளிமையாக நடத்த அரசு முடிவு செய்ததுள்ளது.

மைசூரு அருகே சாமுண்டி மலையில் சிறப்பு பூஜையுடன் மைசூரு தசரா விழா தொடங்கியது.

கர்நாடக முதல்வர் குமாரசாமி, இன்போசிஸ் அறக்கட்டளை தலைவியும், எழுத்தாளருமான சுதாமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. மைசூரு அரண்மனையில்பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன .

தசரா விழாவையொட்டி மைசூரு நகர் முழுவதும் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

இதனால் மைசூரு நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: