மாணவர்கள் மீது போலீஸ் தடியடி- கமல்ஹாசன் கண்டனம்

விளம்பரங்கள்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய மாணவர் சங்கம் சார்பில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முற்றுகை போராட்டம் நடைபெற இருந்தது. வருகை பதிவு அபராத கட்டண தொகையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,தமிழ் வழியில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும், தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

மாணவர்களின் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். மாணவ-மாணவிகளை போலீசார் கைது செய்தனர். மேலும் ஏராளமான மாணவர்கள் அங்கு வந்து குவிந்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் மாணவ-மாணவிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் மண்டபத்தில் இருந்த மாணவ- மாணவிகள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். பின்னர்,துணை வேந்தர் பாஸ்கர், பதிவாளர் சந்தோஷ் பாபு ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.உடன்பாடு ஏற்படவில்லை.

இதையறிந்த மாணவர்கள் கோபமுற்றனர்.பல்கலைக்கழகம் உள்ளே செல்ல முயன்றனர்.இதனால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது .இதையடுத்து மாணவ- மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.இதில் பல மாணவர்கள் படுகாயம் அடைந்தனர் .

“மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கும், மாணவர்களுக்குமான கருத்து வேறுபாட்டை, சுமூகமாகத் தீர்த்துவைக்கும் நடவடிக்கைகள் எடுக்காமல், காவலர்கள் வன்முறையால் கட்டுப்பாடு ஏற்படுத்த நினைத்தது கண்டிக்கத்தக்கது” என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: