சிம்பு உடன் இணையும் யோகிபாபு !!

விளம்பரங்கள்

‘அட்டாரிண்டிகி தாரேடி’ தெலுங்கு ரீமேக்கில் சிம்பு நடித்து வருகிறார் .2013-ஆம் ஆண்டு வெளியான த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கியிருந்த இப்படத்தில் ஹீரோவாக ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் நடித்திருந்தார்.

இதில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக சமந்தா மற்றும் ப்ரனிதா, நதியா, பொம்மன் இரானி, பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் மெகா ஹிட்டானது,ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது .இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ வாங்கியது . இதில் சிம்பு நடிக்கிறார்.

இப்படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். கேத்ரின் திரசா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் ஹைதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது, இந்த படத்தில் காமெடியில் கலக்க யோகி பாபு கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: