கார்த்திக் சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம் !

விளம்பரங்கள்

கார்த்தி சிதம்பரத்தின் 54 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.இவர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் ஆவார் .

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி ஆகியோர் மீதும், அந்நிறுவனத்தின் பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் அவர்களது வீடுகளிலும் சோதனை நடந்தது. இந்த வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் இரண்டு பேரையும் கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,

  • கொடைக்கானலில் ப.சிதம்பரம் குடும்பத்திற்கு சொந்தமான 2 காட்டேஜ்கள்
  • டெல்லியில் உள்ள வீடு
  • உதகை,கொடைக்கானலில் உள்ள சொத்துக்கள்
  • லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் 54 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

வங்கியில் உள்ள 90 லட்சம் ரூபாயும் முடக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜியின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: