காதலியை சுட்டு கொன்ற காதலன் !

விளம்பரங்கள்

விழுப்புரம் அருகே கருத்து வேறுபாட்டால் காதலியை சுட்டு கொன்ற காதலனால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக்வேல் , இவர் சென்னையில் காவலராக பணியாற்றி வருகிறார்.இவர் செஞ்சியில் சரஸ்வதி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்த காதலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த கொலை நடந்துள்ளது.சரஸ்வதிக்கு பிறந்தநாளுக்கு சென்னையில் இருந்து கிளம்பி காவலர் கார்த்திக்வேல் செஞ்சியை அடுத்த அன்னியூர் கிராமத்திற்கு வந்துள்ளார். நேற்று சரஸ்வதியும், கார்த்திக்வேலும் சந்தித்து இருக்கிறார்கள்.

அங்கு சரஸ்வதியை கொலை செய்துள்ளார். துப்பாக்கியால் தலையில் சுட்டு கொலை செய்தார். சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இவர்களுக்கு இடையில் சிறிய சண்டை வந்துள்ளதாக கூறப்படுகிறது,வாக்குவாதம் முற்றியுள்ளது. அதனால் கொலை நடந்துள்ளது. விசாரணை நடந்து வருகிறது ஆனாலும் இந்த கொலைக்கான உண்மையான காரணம் தெரியவில்லை.

இது ஏன் நடந்தது என்று தெரியவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.மருத்துவக் கல்லூரியில் சரஸ்வதி, 3ஆம் ஆண்டு படித்து வந்த நிலையில் அவர் கொல்லப்பட்டுள்ளார். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: