பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் நக்கீரன் கோபால் கைதும் விடுதலையும் : அவமானப்பட்ட கவர்னர் !

நக்கீரன் கோபால் கைதும் விடுதலையும் : அவமானப்பட்ட கவர்னர் !

நக்கீரன் கோபால் கைதும் விடுதலையும் : அவமானப்பட்ட கவர்னர் ! post thumbnail image

 

நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க முடியாது என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் கூறி விட்டது. அவர் மீது சுமத்தப்பட்ட தேச துரோக வழக்கும் ரத்து செய்யப்பட்டது .

சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியர் ஆர்.கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுதாக்கல் செய்தார். ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில், நக்கீரன் கோபால் சார்பாக வழக்கறிஞர் பி.டி பெருமாள் வாதிட்டார்.

நக்கீரன் கோபால் மீது 124 பிரிவின் கீழ்வழக்குப் பதிய முடியாது .

ஆளுநரை மிரட்டும் வகையில் நக்கீரன் கட்டுரை இல்லை.ஆளுநரின் பணிகளைத் தடுத்தால்தான் 124 போட முடியும்,கைது செய்ய ஆளுநரின் ஒப்புதல் இருக்கிறதா.

கட்டுரை வந்து இவ்வளவு நாட்கள் கழித்து நடவடிக்கை எடுக்க என்ன காரணம்,ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் வழக்கு தொடரப்பட்டதா ? என நீதிபதி சரமாரியாக கேள்விகளை கேட்டார்.

மேலும் பத்திரிகையாளர் தரப்பில் இந்து ஆசிரியர் ராம் 124ஆம் பிரிவின் கீழ் இது வராது என பத்திரிகையாளர் தரப்பு வாதங்களை விளக்கினார் .அரசு தரப்பு வழக்கறிஞர் பதில் ஏதும் தெரியாது என்று கூறினார்.

இதையடுத்து,நக்கீரன் கோபாலை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை, 124 பிரிவின் கீழ் இவ்வழக்கு வராது எனக்கூறி நீதிபதி அவரை விடுதலை செய்தார்.

முன்னதாக கைதுசெய்யப்பட்ட நக்கீரன் கோபால் மருத்துவ பரிசோதனை செய்ய அழைத்து சென்ற போது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவரை சந்தித்தார்.வைகோ நீதிமன்றத்தின் வெளியே தர்ணாவில் ஈடுபட்டார்.

நக்கீரன் கோபால் கைதினை கண்டித்து பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

 

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி