தொழில்நுட்பம் தகவல் திருட்டால் மூடப்படும் கூகிள் பிளஸ் !

தகவல் திருட்டால் மூடப்படும் கூகிள் பிளஸ் !

தகவல் திருட்டால் மூடப்படும் கூகிள் பிளஸ் ! post thumbnail image
தகவல்கள் திருடப்பட்டதால் கூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.திருடுபோன தகவல்கள் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கான தகவல்கள் அடங்கும்.

‘கூகுள்’ தேடல் இணையதளதின் ஒரு அங்கம் ‘கூகுள் பிள்ஸ்’ சமூக வலைத்தளம். இது 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந் தேதி தொடங்கப்பட்டது. ஆனால் ‘பேஸ் புக்’ சமூக வலைத்தளத்தின் வளர்ச்சியுடன் ஈடுகொடுக்க முடியவில்லை.பெருபாலானோர் இதை உபயோகப்படுத்தவேயில்லை.

இந்நிலையில் தற்போது ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைத்தள உபயோகிப்பாளர்கள்தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத்தலைவர் பென் ஸ்மித் கூறும்போது, “இந்த தகவல் திருட்டு பற்றி, இதை உருவாக்கியவர்களுக்கு தெரியும் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.

இதில் இருந்து திருடப்பட்ட தகவல்கள் தவறான வழியில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று கூறுவதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது” என்று கூறினார்.

ஆனால் இந்த தகவல் திருட்டு பற்றி ‘தி வால் ஸ்ரிரீட் ஜர்னல்’ பத்திரிகை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தி விட்டது.

இதையடுத்து ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைத்தளம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உடனடியாக மூடப்படாது .பத்து மாதம் ஆகும் என தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி