வசூலை குவிக்கும் “96” ! மக்கள் கூட்டம் அலைமோதுகிறது !

விளம்பரங்கள்

 

முதன்முதலாக விஜய் சேதுபதி- திரிஷா ஜோடி சேர்ந்து நடித்தள்ள படம் “96”. படம் வெளியானதில் இருந்து படத்தை பார்த்தவர்கள் தங்களது பள்ளி கால காதலை கண்டிப்பாக நினைவு கூர்ந்து,திரும்பி சென்று பார்க்குமளவுக்கு அனைவரையும் இப்படம் ஈர்த்துள்ளது .வாட்ஸ் அப் ஸ்டேடஸில் காதலே காதலே என்ற பாடல் தான் அதிகம் இருக்கிறது.. அந்த அளவிற்கு ரசிகர்களை கதை மூலம் ஈர்த்திருக்கும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது.

படம் கடந்த 4 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 10 கோடிக்கு வசூலித்துள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு அதிகமாகியுள்ளதால் படக்குழுவினர் படு சந்தோஷத்தில் உள்ளனர்.

இப்படம் மேலும் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.வெளியான முதல் நாள் பைனான்ஸ் பிரச்னையால் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: