ப்ரித்வி ஷா வைத்து விளம்பரமா ? பிடிங்க வக்கீல் நோட்டீஸ் !

விளம்பரங்கள்

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சதமடித்து ,இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார் 18 வயதே ஆன ப்ரித்வி ஷா .

துடிப்பான ஆட்டமும் ,இளம் வயதும் இந்திய ரசிகர்களை கவர்ந்துள்ளது .உள்ளூர் போட்டிகளில் எப்படி அதிரடியாக விளையாடினாரோ அப்படியே சர்வதேச போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி வருகிறார்.

இவரது சதத்தினை கண்டு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன .அந்த வாழ்த்துகளிலும் சிலர் விளம்பரம் தேடியுள்ளனராம்.

சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்த ஸ்விக்கி மற்றும் பிரீசார்ஜ் போன்ற நிறுவனங்கள் தங்கள் வாழ்த்துக்களுடன் தங்கள் நிறுவனத்தையும் ப்ரொமோட் செய்து கொண்டார்களாம்.ப்ரித்வி ஷாவின் விளம்பர வாய்ப்புகளை கையாளும் பேஸ்லைன் என்ற நிறுவனம் அந்நிறுவனங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம் .இதையடுத்து அந்த பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: